‘இயக்குனர்’ சி வி குமாரின் ‘மாயவன்’

maay 6
தனது திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் பல வித்தியாசமான படங்களைத் தயாரித்து , பல இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் , பல நடிக நடிகையரை அறிமுகப்படுத்திய, 
தயாரிப்பாளர் சி வி குமார் மாயவன் படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார் . சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி,
ஜாக்கி ஷெராஃப், ஆகியோர் நடிப்பில்,  இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை வசனம் எழுத கதை எழுதி படத்தை இயக்கி இருக்கிறார் சி வி குமார் . படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரைலர் மற்றும் பல்துறைப் பிரமுகர்கள் சிவி குமாரை வாழ்த்தும் காட்சிகள் திரையிடப்பட்டன.

maay 7

ஒரு சைகோ கொலைகாரன் மாதிரியான கேரக்டரில் டேனியல் பாலாஜி மிரட்ட அவரை கண்டு பிடிக்கும் போலீஸ் துறையின் செயல்பாடுகள் ,

ஆக்ஷன் ,காதல் , விசாரணை, தடயம் , ரத்தம் என விரிந்தது படத்தின் முன்னோட்டம் . தேவையற்ற உரத்த சத்தங்கள் இல்லாமல் இருந்தது முன்னோட்டத்தின் சிறப்பு. 
தவிர குற்ற நிகழ்வுகள் மற்றும் விசாரணைகளில் போலீசார் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் செயல்பாடுகளை வைத்தே, 
தொழில் நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் போடப்பட்டது அழகு . இயக்குனராகவும் சி வி குமார் சிரத்தை காட்டி இருப்பதற்கு இவை எல்லாம் உதாரணம் . சபாஷ் .
maay 3பல பிரபலங்களும் ” ஒரு வெற்றிப் பட தயாரிப்பாளராக சாதித்துக் கொண்டு இருக்கும்போதே அவர் இயக்குனராக களம் இறங்குகிறார் என்றால் சினிமா மீது அவருக்கு உள்ள காதல் அதில் புரிகிறது ” என்றனர் .

பார்த்திபன் ஒரு படி மேலே போய் ” சி வி (c.v.) குமார் என்றால் சினிமா(Cinema) வெறி (Veri) குமார் என்று அர்த்தம் சொல்லலாம் ” என்று கூறி இருந்தார்

நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்திய தயாரிப்பாளர் தனஞ்செயன்,

maay 2
” சி வி குமார் எனக்கு நெருங்கிய நண்பர் . நாங்கள் பல கதைகளை விவாதிப்போம் .
என்ன கதை சொன்னாலும் அதில் சில குறைகளையும் மேம்பாடுகளையும் சொல்லும் அளவுக்கு கதை அறிவு கொண்டவர் அவர் .
நான் தயாரிப்பதாக இருந்த பல கதைகளில் உள்ள குறைகளை எனக்கு சுட்டிக் காட்டியவர் அவர்தான் . அவை எல்லாம் எனக்கு தெரியாமல் போயிருந்தால் நான் மிக நஷ்டப்பட்டு இருப்பேன் . அப்படிப்பட்ட சி வி குமார் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அது எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை . அதன் அடையாளம்தான் இந்த முன்னோட்டம் .

அவருக்கு என் வாழ்த்துக்கள் .

நான் சொல்லி சி வி குமார் பாராட்டிய கதை ஒன்றின் மூலம் நானும்  விரைவில் இயக்குனராக களம் இறங்குகிறேன் ” என்றார் .

இயக்குனர் நலன் குமாரசாமி பேசும்போது,

maay 8

” சி வி குமார் எப்போதுமே பல கதைகளுக்கான ஐடியாக்கள் சொல்லிக் கொண்டே இருப்பார் .

அப்படி அவர் சொன்ன கதைகளைக் கேட்ட நான் , இந்த மாயவன் படத்தின் கதையைக் கேட்டபோது ‘ நீங்க சொன்ன கதைகளிலேயே இது பெஸ்ட்’ என்றேன் .
அதை டெவலப் செய்து டைரக்ஷன் செய்ய முடிவு செய்து களம் இறங்கினார் . ஒரு நிலையில் ஏனோ கிடப்பில் போட்டார் .
அவரை எப்படியாவது டைரக்டர் ஆக்க வேண்டும் என்று நானே படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிக்  கொடுத்தேன் ” என்றார் . நடிகர் மைம் கோபி பேசும் போதுmaay 999

” சி வி குமார் ஸ்பாட்டில் டைரக்ட் செய்யும் வித அழகாக இருக்கும் . நமக்கு ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக சத்தம் போட்டு சொல்ல மாட்டார் .

தன் அசிஸ்டன்ட்டைக் கண்ணாலேயே அழைப்பார் . அழைத்து அவரிடம் காதில் சொல்வார் . அந்த அசிஸ்டன்ட் நம்மிடம் வந்து காதில் சொல்லி விட்டுப் போவார் .” என்றார் .
நாயகன் சந்தீப் தன் பேச்சில் ” சி வி குமார் ஆரம்பம் முதலே என்னோடு நட்புடன் பழகுவார் . நானும் அந்த நட்பு மூடிலேயே அவருடன் பேசுவேன் .
ஆனால் அப்புறம்தான் அவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் என்பதே எனக்கு புரிந்தது  இந்தப் படத்துக்கு நடிக்க அழைத்தபோது யார் டைரக்டர் என்று எனக்கு சொல்லவில்லை .
பின்னர் அவர்தான் என்று தெரிந்த போது ரொம்ப சந்தோஷப்பட்டேன் . 
இனி அவர் பல படங்களை இயக்கலாம் . ஆனால் அவர் இயக்கிய முதல் படத்தில் நான்தான் ஹீரோ . அதை நானும் மறக்க மாட்டேன் . அவரும் மறக்க முடியாது ” என்றார் டேனியல் பாலாஜி பேசும்போதுmaay 1

” சந்தீப் சொன்னது போல , சி வி குமார் இயக்கிய முதல் படத்தின் வில்லன் நான் என்பது எனக்கு சந்தோஷமான விஷயம் .

என்ன கேரக்டர் என்று கேட்டபோது இரண்டு குணாம்சம் என்றார்கள் . டபுள் ஆக்டா என்ற போது இல்லை என்றார்கள். ஸ்பிலிட் பர்சனாலிட்டியா என்றால், 

அதுவும் இல்லை என்றார்கள் . இப்படி கதை சொன்னபோதே ஆர்வம் அதிகமானது இந்த  கேரக்டருக்கு வெள்ளையான ஒருவர் வேண்டும் என்று எல்லோரும் சொன்னபோது ,
‘ இல்லை இல்லை . கருப்பான தோற்றம் உள்ள நபர்தான் சரி வரும்’ என்று கூறி ,
என் பெயரை சொன்னவர் நலன் குமாரசாமி சார் என்று கேள்விப் பட்டேன் . அவருக்கு என் நன்றி ” என்றார் .
முத்தாய்ப்பாகப் பேசிய சி  வி குமார்,
maay 9999

” டைரக்ஷன் பண்ண வேண்டும் என்ற பெரிய லட்சியம் எல்லாம் எனக்கு கிடையாது. பொதுவாகவே பெரிதாக எந்த லட்சியமும் இல்லாத வாழ்க்கை என்னுடையது .

இருக்கிற கட்டத்தில் இருந்து அடுத்த இடத்துக்குப் போக வேண்டும். அவ்வளவுதான் அப்படிதான் டைரக்ஷனும் வந்தது .
ஆரம்பம் முதல் என் படங்களுக்கு பக்க பலமாக இருப்பவர் எடிட்டர் லியோ ஜான் பால் . எனக்கும் அவருக்கும் வராத சண்டைகளே இல்லை .
ஆனால் எல்லாமும் படத்தின் நன்மைக்காக . இந்தப் படத்துக்கும் அவர் பெரிய பலம் . maay 5இசைக்கு சந்தோஷ் நாராயணனிடம்தான் போக நினைத்தேன் . அவரும் நான்தான் மியூசிக் பண்ணுவேன் என்று சொல்லி இருந்தார் . ஆனால் ஜிப்ரானின்  படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் வந்தார்.

படத்தில் இரண்டு பாடல்கள் இரண்டும் கதைப் போக்கில் நிகழ்பவை . படத்தில் அவரது பின்னணி இசை பெரிய பலமாக வந்துள்ளது .
படம் நன்றாக வர எனக்கு கிடைத்த உதவி இயக்குனர்களும் ஒரு காரணம் . அவர்கள் சிறப்பாக உழைத்து எனக்கு உதவினார்கள் .

மாயவன் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படமாக உங்களுக்கு வந்து சேரும் ” என்றார் .

வாழ்த்துகள் இயக்குனர் சி வி குமார் . !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *