சின்னசிறு கிளியே @ விமர்சனம்

செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்நாதன் தயாரிக்க    கரகாட்டக்காரன் புகழ்,  மறைந்த நடிகர் சண்முகசுந்தரம் அவர்களின் மகன் பாலாஜி சுந்தரம்  நடிகராக அறிமுகமாக, செந்தில் நாதன், பேபி  பதிவாதினி, அர்ச்சனா சிங், சாண்ட்ரா நாயர் நடிப்பில் பல்வேறு குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை வென்றுள்ள சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கி இருக்கும் படம் சின்னஞ்சிறு கிளியே 

 
பாரம்பரிய தமிழ் மருத்துவம் இயற்கை உணர்வு தொழில் செய்யும் இளைஞனின் காதல் மனைவிக்கு அவளது பெற்றோர் ஆங்கில முறைப்படி மருத்துவம் பார்க்க, சாதாரண வலியை பிரசவ வலி என்று எண்ணி சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்க, குழந்தை பிழைத்து தாய் இறக்கிறாள் . 
 
பிறந்த மகளே தன் வாழ்வு என்று எண்ணி வாழும் அவனுக்கு , ஆங்கில மருத்துவ ரீதியிலான எலும்பு மஜ்ஜை திருட்டு மூலம் மகளுக்கு ஆபத்து வர , இனி அந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாது என்று எண்ணிபோராடும்,  அவனுக்கும் மருத்துவ மாபியாவுக்கும் இடையில் நடந்தது என்ன என்பதே சின்னஞ்சிறு கிளியே படம் . 
 
இன்றைய ஸ்டெம் செல் தெரபியை அன்றே தொப்புள் கொடியை தாயத்தில் வைத்ததன்  மூலம் பயன்படுத்தியதை குறிப்பிடுவது , தமிழ் மருத்துவம் , இயற்கை உணவு , மருத்துவ மாபியா ,போன்றவற்றை சொல்வது  என்ற வகையில் படத்தை பாராட்டலாம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *