விக்னேஷ் எல்லப்பன் தயாரிப்பில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, ரேகா, எம் எஸ் பாஸ்கர், சம்ஸ்கிருதி நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கி இருக்கும் படம் பேய் மாமா
கொடைக்கானல் மலைப் பகுதியில் பாரம்பரிய மருத்துவம் வசதி வாய்ப்பு, பெரிய பங்களா , ஏழைகளுக்கு உதவி என்று வாழும் ஒரு குடும்பத்தை,
அந்தப் பகுதியில் உள்ள மூலிகைகளை பயன்படுத்தி மேல் நாட்டுக்கு மருந்து தயாரித்து அனுப்ப பயன்படுத்திக் கொள்ள விரும்பும் ஆங்கில மருத்துவ கும்பல் ஒன்றுக்காக ,
ஒரு கும்பல் களம் இறங்கி தீர்த்துக் கட்டுகிறது .
எல்லாம் தீர்ந்த பின்பு , கொலை செய்தவர்களுக்குள் சண்டை வந்து அந்த பெரிய பங்களாவை அபகரிக்க சண்டை இட்டுக் கொள்கிறது . ஒருவன் அதை விற்று லாபம் பார்க்க முயல ,
இன்னொருவன் அதில் பே இருப்பதாக சொல்லி விற்பனையை தடுக்க, உண்மையிலேயே பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தினர் அங்கு பேயாக இருக்கின்றனர் .
பேய் ஓட்டுவது போல நடிக்கும் ஒருவன் அங்கே போக அவனுக்குள் நல்ல பேய்கள் இறங்கி , தங்களைக் கொன்றவர்களை பழி வாங்க நினைக்க
நடந்தது என்ன என்பதே பேய் மாமா
அதீத உறுமல் மற்றும் சத்தங்கள் மூலம் ஆரம்பக் காட்சிகளில் பேய் மூடு கிடைக்கிறது .
யோகி பாபு வந்த உடன் சற்றே காமெடியும் .
மொட்டை ராஜேந்திரன் ரேகா காதல், பேயோட்டும் சாமியாராக வரும் கோவை சரளா என்று நடிகர்கள் மூலம் நகைச்சுவையை உருவாக்க முயன்று இருக்கிறார்கள் .
சித்தர் பாடல் , மருத்துவ பாடல்கள், கொஞ்சம் சி ஜி இவற்றின் மூலம் பேய்ப்படமாக ஆகிறது பேய் மாமா