விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரிக்க, சச்சின் – அபர்நிதி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் எழுதி இயக்கி இருக்கும் படம் டிமன் (Demon)
வசந்த பாலன் இயக்கிய அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’ மற்றும் கோகுல் இயக்கிய , ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் இயக்குனர் பிரிவில் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல்.
சச்சின் லிங்குசாமி வெளியிட்ட பிகினிங் படத்தில் நாயகனாக நடித்தவர். கதாநாயகி அபர்னதி ஜி.வி.பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்றவர் . ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பால்’ இணையத் தொடரிலும் அபர்நதியின் நடிப்பிற்கு நல்ல பேர் கிடைத்தது
மோகன்லாலின் தேசிய விருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகிறார். ஆர்.எஸ். ஆனந்த குமார் பிரபுதேவா நடித்த ‘குலேபாகவலி’ , ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர் எஸ் ஆனந்தகுமார் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும், ‘கும்கி’ அஸ்வின், ‘இன்ஸ்டாகிராம்’ சென்சேஷன் ரவீனா தாஹா, ‘பிக் பாஸ்’ புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத் தொகுப்பு – ரவிக்குமார்.எம், கலை இயக்கம் – விஜய் ராஜன், , தயாரிப்பு நிர்வாகம் – குமார் வீரப்பசாமி, சண்டை இயக்கம் – ராக் பிரபு, ஒலிக் கலவை – ஹரிஷ், ஒலி வடிவமைப்பு – ராஜு ஆல்பர்ட், VFX & DI – Accel Media, வண்ணம் – ஜி.எஸ்.முத்து, தயாரிப்பு வடிவமைப்பு – வி.பாலகிருஷ்ணன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி’ஒன், விளம்பர வடிவமைப்பு – யுவராஜ் கணேசன்.
படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் மிஷ்கினும் வெளியிட்டு இருந்த நிலையில் விரைவில் படம் திரைக்கு வருவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் ரமேஷ் பழனிவேல், ” இது சைக்காலஜிக்கல் ஹாரர் திரைப்படம். பொதுவாக பேய்ப்படம் என்றால் மனிதர்களை பேய் மிரட்டும் கொல்லும் என்று கதைகள் வந்ததைப் பார்த்திருப்பீர்கள் . அதில் இருந்து இந்த கதை மாறுபட்டது .
மனிதர்களை தற்கொலை செய்து கொண்டு சாகத் தூண்டும் பேய்களை இந்தப் படத்தில் பார்க்கலாம் . படத்தில் பேய் மனிதர்கள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பிலேயே இருக்கும் . டெல்லியில் ஒரே வீட்டில் பதினோரு பேர் தற்கொலை செய்து கொண்ட உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதினேன் .
ஆனந்தகுமார் என் நண்பர் . என் கதைகள் அவருக்குத் தெரியும்.அவர்தான் என்னை தயாரிப்பாளருக்கு அறிமுகப்படுத்தினார். ” என்றார் .
ஆர் எஸ் ஆனந்தகுமார் பேசும் போது, ” ஆரம்பத்தில் ரமேஷ் வேறொரு கதை சொன்னார் . ஆனால் அது பட்ஜெட் கொஞ்சம் அதிகம் வந்தது . அதே நேரம் இந்தக் கதை குறைவான பட்ஜெட்டில் சுவாரஸ்யமாகவும் இருந்தது . எனவே இதை தயாரிக்கும் முடிவுக்கு வந்தோம் . “என்றார் .
தயாரிப்பாளர் சோமசுந்தரம், ” எனக்கு நடிக்கும் ஆசை உண்டு . எனவே நானும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்” என்றார் .
தொடர்ந்து இயக்குனர் , ” ஒரு காட்சியில் நானும் ஆட்டோ டிரைவராக நடித்துளேன். அது மட்டுமல்ல.. படத்தின் தயாரிப்பில் வசந்தபாலன் சாரும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார் . வசந்த பாலன் வழங்கும் படமாகவே வெளிவருகிறது இந்தப் படம்” என்றார.
வாழ்த்துகள்