நண்பர்கள் விஷால் – ஆர்யா நடிக்கும் ‘ எனிமி’

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்  இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் .
 
 பாடல்களை தமன் இசையமைக்க  RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS அமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு  நடந்தது ,
 
நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது,
 
“என்னுடைய நல்ல நண்பர் புனித் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட நாட்கள் கடந்து பத்திரிகை நண்பர்களான உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. 
 
எனிமி தீபாவளிக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு இந்த தயாரிப்பாளர் வினோத்குமார் தான் காரணம். எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடி க்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். 
 
ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக் கதையில் ஜாமி ( ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனை தான் இந்தப்படம். 
 
ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்ன வென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சர்பாட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டார். ஏற்கனவே அவருடன் அவன் இவன் செய்திருக்கிறேன் இந்தப் படமும் சூப்பராக இருக்கும். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்ய காத்திருக்கிறேன். 
 
மிருணாளினி  நன்றாக நடித்திருக்கிறார். \. 
 
கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும் போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம். .
 
DOP RD.ராஜசேகர் சார் அசத்தியிருக்கிறார். சமனின் பாடல்களும் , சாம்.CS   ரீ-ரிகார்ட்டிங்கும் மிரட்டல். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். 600 தியேட்டருக்கு மேல் தெலுங்கானா ஆந்திராவில் இப்படம் வெளியாகப்போகிறது. மிக பிரமாண்டமாக இப்படம் வெளியாகவுள்ளது நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம்  இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம் .இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள் அவர்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.”என்றார். 
ஆர்யா தனது பேச்சில்,
” இப்படத்தைப் பற்றி என்னிடம் முதலிடம் கூறியவர் விஷால். கதை கேட்கும்படி சொன்னார் .நானும் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கேட்டவுடன் இரண்டு கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது .எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது  என்று ஒரு குழப்பம் நிலவியது எனக்கு. படத்தில் எனக்காக சிறப்பு காட்சிகளும் மாஸ் காட்சிகள் அதிகமாக  வைக்க சொல்லி விஷால் கூறியுள்ளார் .வேறு யாரும் இப்படி சொல்வார்களா என்று எனக்கு தெரியவில்லை .நன்றி. 
 
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை நானும் விஷாலும் பார்த்தோம் .இப்படி ஒரு காட்சி இனி எங்களால் மீண்டும் நடிக்க  முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரமாண்டமாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் மிகப்பெரிய பலம் .இப்படத்தின் காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்க வேண்டியிருந்தது .கொரோனா காரணமாக எடுக்க முடியவில்லை .அதனால் துபாயில் படத்தை எடுக்க முடிவு செய்தார் .துபாயில் எடுத்தால் மூன்று மடங்கு செலவாகும் என தெரிந்தும் எடுக்க முன்வந்தார். தீபாவளிக்கு ரஜினி சாரின் படத்துடன் இப்படம் வெளியாகிறது .கண்டிப்பாக அனைவரும் திரையரங்குகளில் படத்தை பாருங்கள் நன்றி.”என்றார். 
 
இயக்குனர் ஆனந்த் சங்கர்,
 
” எனது முந்தைய இரு படங்களை விட இப்படத்தில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். கண்டிப்பாக இந்த பாராட்டு ஷான் அவர்களுக்கு  போய் சேரும். நடிகை மிர்னாலினி ரவி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் .அவர் டிக் டாக் வீடியோக்கள் நிறையவே பார்த்து ரசித்து இருக்கிறோம் .அவரால் கண்டிப்பாக நடிக்க முடியும் என்று நம்பி படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம் .அவர் டான்ஸர் கூட. 
 
இப்படத்தின் பாடல்களை தமன் இசையமைத்துள்ளார் பின்னணி இசையை சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் .கைதி, விக்ரம்வேதா படத்தின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்த பின்னணி இசை. அதனால் இப்படத்திற்கும் அவர்தான் பின்னணி இசை அமைக்க வேண்டும் என நினைத்தோம் .அதேபோல் எதிர்பார்ப்புகளை தாண்டி படத்தின் பின்னணி இசை அருமையாக வந்துள்ளது. 
 
இப்படம் சுலபமாக தற்போது வெளியாவதற்கு காரணம் தயாரிப்பாளர் வினோத். அவர் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை. விஷால் சாருக்கு ஆக்சன் காட்சிகள் அதிகம்  வைக்க வேணுடும் என்று பலர் கேட்டுக்கொண்டதால் அவருக்காக சில சிறப்பு ஆக்ஷன் காட்சிகளை படத்தில் வைத்துள்ளோம். ஆர்யா கடின உழைப்பாளி .மிகவும் எனர்ஜியான நடிகர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் RD சார் ஒளிப்பதிவுக்காக  தனி பாராட்டைப் பெறுவார். தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறோம்.
 
தயாரிப்பாளர் வினோத்குமார் தனது பேச்சில், “என் திரையுலக வாழ்க்கையில் நான் தனுஷ் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன் .அவருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி முழுமையாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஒப்படைத்தார் .அதன் மூலம் 14 படங்களை  தயாரித்து . தயாரிப்பு ,தயாரிப்பு மேற்பார்வை ஆகியவற்றை முழுமையாக கற்றுக் கொண்டேன். அடுத்ததாக இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஷால் ,ஆர்யாவுக்கும் இயக்க முன்வந்த ஆனந்த் சங்கருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அதிக செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது ,அதற்கான ரிசல்ட் இப்படத்தின்  வெளியீட்டில் தெரியும் என நினைக்கிறேன் .அனைவரது ஆதரவும் தேவை நன்றி”என்றார். .
 
நடிகை மிருணாளினி ரவி , “எனது திரையுலக பயணத்தில் தொடக்க காலத்திலேயே இப்படி ஒரு மிகப்பெரிய படம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது .என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த ஆனந்த் ஷங்கர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் சார் அனுபவம் வாய்ந்த மிகப்பெரிய நடிகர். எனக்கு கூச்சமாக பயமாக தான் இருந்தது. ஆனால் எளிய மனிதரை போல் என்னிடம் பழகினார். ஆர்யா சாருடன் இணைந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது .இப்படத்தில்  அழகான பாடல்களை கொடுத்த தமன்அவர்களுக்கு நன்றி .தீபாவளிக்கு இப்படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.”என்றார் 
 
வசனகர்த்தா ஷான் கருப்பசாமி , “நோட்டா படத்துக்கு பிறகு ஆனந்த் சங்கருடன் இணைந்து பணி புரிந்துள்ளேன். இப்படத்தின் டீசரில் வரும் டயலாக்குகள் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்தில் ஒவ்வொரு  ஆக்சன் சீன்கள் பின்னாலும் ஒரு எமோஷனல் இருக்கும். உளவியல் ரீதியாக பல வசனங்களை வைத்துள்ளோம் .வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.”என்றார் 
 
கலை இயக்குனர் ராமலிங்கம் பேசும்போது, இந்த படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் என்று சொல்லலாம். எனது முயற்சியின் அடுத்தகட்ட நகர்வாக பார்க்கிறேன். இந்த படத்தில் ஹீரோவின் தந்தையின் கதாபாத்திரத்தின் பெயரை ராமலிங்கம் என எனது பெயரை இயக்குனர் வைத்துள்ளார் அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் சிங்கப்பூர் செட்டை ஐதராபாத்தில் உருவாக்கினோம். இந்தப் படத்தில் பணி புரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இப்படத்திற்கு அவர் மிகப்பெரிய பலம்.”என்றார் 
 
இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது பேச்சில்,
 
“நோட்டா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஆனந்த் ஷங்கருடன் இணைந்து உள்ளேன் .இந்த படத்தில் லேட்டாகத்தான் இணைந்தேன்.உலகத்தரம் வாய்ந்த என்கின்ற வார்த்தையை நிரூபித்தவர் ஆனந்த் ஷங்கர். ஒரு படத்தின் கதைதான் அந்தப் படத்தின் பின்னணி இசையை தீர்மானிக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. பின்னணி இசை நினைத்ததை விட அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.”என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *