ஃபிரீடம் (FREEDOM) @ விமர்சனம்

விஜயகணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராமன் தயாரிக்க, சசிகுமார் , லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர் , பாய்ஸ் மணிகண்டன் நடிப்பில் சத்யா சிவா எழுதி இயக்கி இருக்கும் படம் .

இலங்கையில் சிங்கள நாய்களால் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் இனக் கருவறுப்பு செய்யப்படும் சூழலில் ,தமிழ் மக்கள்  அகதிகளாக தமிழகம் வர, அவர்கள் முகாமில் அடைக்கப்படுகின்றனர் . ஈழம் வாழ் தம்பதி ஒன்று ( சசிகுமார் – லிஜோமோல் ஜோஸ்) அப்படி சொந்த மண்ணில் சிங்கள நாய்களால் பெரும் அவதி அடையும் சூழலில் இருவரும் இந்தியாவுக்கு அகதிகளாக வர முடிவு செய்கின்றனர் , 

அந்த நேரத்தில் ஒரு சிங்கள வேசி  மகன் தமிழ்ப் பெண் ஒருத்தியை பாலியல் ரீதியாக அவமானப்படுத்த முயல, அவனைத் தாக்குகிறான் நாயகன் மாறன் (சசிகுமார்) .தமிழ் நாய் ஒன்றே மாறனைக் கைது செய்ய வர, கர்ப்பிணி மனைவியை  (லிஜாமோல்ஜோஸ்)  மட்டும் முதலில் இந்தியா அனுப்புகிறான் . அவள் ராமேஸ்வரம் அகதி முகாமுக்கு  வந்து கணவனுக்காக காத்திருக்கிறாள். 

சிங்கள நாய்களை சமாளித்து பலகாலம் கழித்து ராமேஸ்வரம் முகாமுக்கு வரும் மாறன் மனைவியை நிறைமாத கர்ப்பிணியாய் பார்த்து மகிழ்கிறான் நெகிழ்கிறான் .

சில மணி நேரங்கள்தான் . 

சந்திராசாமி – இத்தாலியின் குவாத்ரோச்சி இவர்கள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய திட்டமிட்டு அதற்கு விடுதலைப் புலிகளில் சிலரை பயன்படுத்த அன்று இரவு ராஜீவ் காந்தி,  மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார் . அரசியல் திசை திருப்பல் மற்றும் சில விடுதலைப்புலிகள் அமைப்பின் (முன்னாள்?) உறுப்பினர்களே அந்த படுகொலையை செய்ய, முழுப் பலியும் விடுதலைப்புலிகள் மேல் போடப்படுகிறது (ஆதாரம் ஜெயின் கமிஷன் அறிக்கை) 

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் புதிதாக வந்தவர்கள் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் அனைவரையும் கைது செய்யப்படுகின்றனர் . அதில் மாறனும் ஒருவன் . காரணம் அவன் இந்தியா வரும்போது சிங்கள நாய்களிடம்  தேவைப்பட்டால் பயன்படுத்த அவன் மாமனார்  கொடுத்து அனுப்பிய துப்பாக்கி . 
பலமாதம் கழித்து மனைவியை பார்த்து,  சில மணிநேரம மட்டுமே ஆன நிலையில் மீண்டும் கணவன் மனைவி பிரிகிறார்கள் . 

கைது செய்யப்பட்டவர்கள் மிகக் கொடூரமாக் விசாரிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு,  தப்பிக்க சிரமமான — சுற்றிலும் நீர் நிறைந்த அகழி உள்ள – செஞ்சிக் கோட்டையில் அடைக்கப்படுகிறார்கள் . 

”ஒருவேளை தலைமை விசாரணை அதிகாரியாக தமிழர் யாரையாவது நியமித்தால் இன பாசத்தோடு நியாயமாக நடந்து கொள்வான் ; எனவே தமிழன் என்றாலே பிடிக்காத அதிகாரியைக் கொண்டு வா” என்று ஒரு கேடுகெட்ட வன்மம பிடித்த உயர் அதிகாரி சொல்ல , தமிழர்கள் என்றாலே வெறுப்பும் வனமும் கக்கும் மனசாட்சியற்ற வஞ்சக மலையாள அதிகாரி ஒருவன் (சுதேவ் நாயர்) அந்த இடத்துக்கு வருகிறான் . 

ஏதோ சிங்களவனுக்கே ரகசிய உறவில் பிறந்தவன் போல அந்த அதிகாரி நடந்து கொள்ள,  மாறன் உட்பட்ட இலங்கை அகதிகள் இங்கும்  பெரும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். 

மனைவிக்கு குழந்தை பிறந்து வளர்ந்தும் மகளின் முகம் கூட பார்க்க முடியாத நிலை மாறனுக்கு. 

சக  ஈழத்தமிழர்கள் சிலர் தப்பிக்க முயல, ”தவறே செய்யாத நாம் அப்படி செய்தால் மேலும் சிக்கல்”  என்று அவர்களைத் தடுக்கும் மாறன் , அந்த தப்பிப்பு முயற்சியைத் தடுக்க, அவர்களே மாறனுக்குப் பகை ஆகின்றனர். இதை அறிந்த மலையாள அதிகாரி மாறனைக் கொன்று விட்டால் உங்களை தப்பிக்க வைக்கிறேன் என்று சொல்ல அவர்கள் மாறனைக் கொல்ல முயல்கிறார்கள் . 

மனித உரிமை அமைப்பு  வழக்கறிஞர் ஒருவரின் (மாளவிகா அவினாஷ்) காவலில் இருப்பவர்களின் குடும்பத்தை செஞ்சிக் கோட்டை முகாமுக்கு வரவைத்து சந்திக்க வைக்க முயல , மாறன் சிறுமி ஆகி விட்டதன் மகளையும் மனைவியையும் பார்க்க ஆவலாக காத்திருக்க , கண்ணுக்கெட்டிய தூரத்தில் அவர்கள் வந்து,  கை தொடுவதற்குள் திட்டமிட்டு,  குரூரத்தோடு சந்திப்பை தடுக்கிறான் அந்த மலையாள  அதிகாரி . 

தப்பிப்பதுதான் வழி என்று மாறனும் முடிவுக்கு வர எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்கள் அறையின் கழிவறை  பீங்கானை அகற்றி அதன் வழியே தப்பிக்க முடிவு செய்து (கழிவுக்கும் அதேதான்?) திட்டமிடுகிறார்கள் . நடந்தது என்ன என்பதே இந்த அற்புதமான படம்.

1991 மே 21 அன்று ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை ஒட்டி கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் படத்தில் வருவது போலவே வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர் . 1995 ஆம் ஆண்டு அவர்களில் 43 பேர்  படத்தில் வருவது போலவே 47 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டி தப்பித்தனர். அவர்களில்  21 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மற்ற 22 பேர் தப்பி கனடா போன்ற நாடுகளுக்குப் போய் விட்டனர் .

அப்போது ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள் அந்த சம்பவத்தை வெகு சிறப்பாக எழுதி வாய் பிளக்க வைத்தன . ஆனால் அவர்கள் எல்லோருமே விடுதலைப்புலிகள் அல்ல ; அதில் அப்பாவி இலங்கை அகதிகளும் உண்டு என்பது அப்போதைய ரகசிய செய்தி .அதை அப்படியே ரத்தமும் சதையுமாய் கண்ணீரும் வியர்வையுமாய் நெகிழ்வும் உருக்கமுமான உயிரோவியமாக படமாக எடுத்து நடித்து கண் முன் படைக்கிறார்கள் இயக்குனர் சத்யசிவா , நாயகன் சசிகுமார் மற்றும் படக் குழுவினர் . 

இப்படி ஒரு படத்தை தயாரிக்க முன்வந்த பாண்டியன் பரசுராமனும் பாராட்டுக்குரியவர். 

முதல் பாதியில், ‘ என்னடா இது எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரத்தையே அடுக்கிக்கிட்டே போறாங்க.  மீண்டும் ஒரு  ‘ என்று ஓர் பயம் வந்தது நிஜம் . 

ஆனால் இரண்டாம் பாகம் எடுக்கும் விஸ்வரூபம் அபாரமானது . அசாத்தியமானது அற்புதமானது .வேலூர் கோட்டை சித்திரவதைக் காட்சிகள், அதிகாரிகளின் வன்ம வெறி, உதவ வரும் மனிதாபிமான அதிகாரிகள் பலமின்றி இருப்பது , சுரங்கம் தோண்டும் காட்சிகள்,  அந்த திட்டம்,  சிரமம் என்று நம்மையும் முகாமுக்குள் கொண்டு போய் உட்கார வைத்து , சித்திரதைகளை அனுபவிக்க வைத்து, நம்  கையிலும் ஒரு இரும்பைக் கொடுத்து வெறி பிடித்த மாதிரி சுரங்கம் தோண்ட விட்டு  விடுகிறார்கள் சத்யா சிவாவும் சசிகுமாரும் . யப்பப்பா. 

ஒரு ரசிகன் பார்வையாளனாக மட்டும் இல்லாமல் கதாபாத்திரமாகவே மாறுவது அரிதான விசயம் . அதுவும எனக்கு எல்லாம் ரொம்ப  அரிது. அது இந்தப் படத்தில் நடந்து இருக்கிறது . 

உழைப்பு தோற்றம் நடிப்பு என்று எல்லா வகையிலும் அட்டகாசப்படுத்தி இருக்கிறார் சசிகுமார் , மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய பங்களிப்பு . மேலே மேல போங்க . 

‘மலையாளப் படமென்றால் கம்மியான சம்பளம் தமிழ்ப் படம் என்றால் அதிக சம்பளம் ‘ என்று இன உணர்வோடு அல்லது தமிழ் தள்ளி வைப்பு உணர்வோடு சம்பளம் கேட்கிறார் லிஜாமோல்ஜோஸ் என்று சில செய்திகள் கூறினாலும், ” வாங்கிட்டு போகட்டும் போ” என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார் . 

பாய்ஸ் மணிகண்டன் உட்பட சிறு சிறு கதாபாத்திரங்கள் வரை எல்லோரும் வியக்கும்படி உழைத்து இருக்கிறார்கள் . சத்யசிவாவின் மெனக்கெடல் நெகிழத்தக்கது . வாழ்த்துகள் . 

ஜிப்ரனின் இசை , ஸ்ரீகாந்தின் படத் தொகுப்பு, என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு, சி உதயகுமாரின் கலை இயக்கம், டி.ரமேஷ், டான் அசோக், டேஞ்சர் மணி இவர்களின் சண்டைக் காட்சிகள் , சிவரஞ்சனியின் உடைகள், ஹரீஷின் ஆடியோ கிராபி, மாரியப்பனின் ஒப்பனை, ஷங்கரின் ஆடை வடிவமைப்பு யாவும் சிறப்பு. எல்லோருமே அர்த்தமுள்ள பங்களிப்பைத் தந்துள்ளனர். 

ஜூலை 11 அன்று வெளிவரவேண்டிய படம்  என்ன காரணத்தாலோ இன்னும் வெளிவரவில்லை. 

காரணம் எதுவாக இருந்தாலும் அதை சரி செய்து இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டியது திரைப்படத் துறையினர், மற்றும் இன உணர்வாளர்கள் கடமை. 

இதற்கு என்னால் எதுவும் முடியுமென்றால் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன் 

மொத்தத்தில் ஃபிரீடம் (FREEDOM)….  படைப்பில் ஒரு KINGDOM 

மகுடம் சூடும் கலைஞர்கள்

 ***************************************

சத்ய சிவா, சசிகுமார், பாண்டியன் பரசுராமன் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *