’டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’.
இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த
படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் என்றாகி இருக்கிறது