4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லிப்ரா புரடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியீட்டில் யோகி பாபு, எலிசா , சார்லி, மயில்சாமி, ராஜ் பரத் நடிப்பில் டான் சாண்டி இயக்கி இருக்கும் படம் கூர்க்கா.
கூர்க்கா இன ஆண், வட சென்னைப் பெண் கலப்பு மணத்தில் பிறந்த பாரம்பரிய வழி வந்த பகதூர் பாபு( யோகி பாபு)வுக்கு போலீஸ் ஆக ஆசை . டென்ஷன் போலீஸ் அதிகாரி ( ரவி மரியா) ஒருவரால் தகுதியற்றவராக அறிவிக்கப் பட்ட நிலையில் , மால் ஒன்றில் செக்யூரிட்டியாக சேருகிறாந பகதூர் . அங்கே சீனியர் செக்யூரிட்டி ஒருவர் ( சார்லி)
அமெரிக்க துணைத் தூதர் பெண் ஒருத்தியை ( எலிசா) டாவடிக்கிறான் பகதூர் பாபு.
போரில் பாதிக்கப்பட்ட மற்றும் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை அரசு பராமரிக்கும் விதத்தால் அதிருப்தி அடைந்த இருவர் , கமிஷனர் , மந்திரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளை, இலவச ஆஃபர் ஆசை காட்டி ஒரு குறிப்பிட்ட நாளில் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மிகப் பெரும் தொகையை கேட்கிறார்கள் .
இந்த நிலையில்தான் பகதூரும் அவனது சீனியரும், தீவிரவாதிகளின் கவனத்தில் இல்லாமல் மாலுக்குள் இருப்பது காவல்துறைக்கு தெரிய வர, அவர்கள் உதவியை நாடுகிறது .
போலீசாரால் புறக்கணிக்கப்பட்ட பகதூர் பாபு போலீசின் கோரிக்கையை ஏற்று மக்களை காப்பாற்றினானா? இல்லை மீண்டும் போலீஸ் அவனை தகுதியற்றவனாக முடிவு செய்யும் நிலைக்கு ஆளானானா ? என்பதே கூர்க்கா .
கூர்க்கா இன பின்னணியில் ஒரு கதை என்பது சுவாரஸ்யம் . அதை விளக்கும் ஆரம்பக் காட்சிகள் அருமை . இங்கே தெரிகிறார் இயக்குனர் சாம் அன்டன் .
யோகி பாபுவின் காமெடி கமெண்டுகள் சிரிக்க வைக்கின்றன .
தவிர, நோட்டாவை விட கம்மியாக ஓட்டு வாங்கிய கட்சியின் ஆணவப் பிரமுகர், பெண் சீடர்கள் புடை சூழ் சாமியார் , டி ஆர் பி க்கு அலையும் டி வி ஓனர் என்று பல சட்டயர் சமாச்சாரங்களும் உண்டு .
கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு சிறப்பு .
ராஜ் ஆர்யனின் பின்னணி இசை ஒகே
காமெடி என்ற பெயரில் பாட்டி உட்பட பலரையும் வாடி போடி என்று யோகிபாபு பேசுவது ஓவர் .
காட்சிகள் பலவற்றின் நீளம் அதிகம் .
கிளைமாக்ஸ் பகுதி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
எனினும் தியேட்டர் கலகலக்கிறது
கூர்க்கா 3.25/ 5