உலக தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங்க் ஆட்ஸ் இணைந்து, பன்னாட்டு கல்வி கண்காட்சி ஒன்றை,
வரும் மே 28 மற்றும் 29ஆம்தேதிகளில் சென்னை வர்த்தக மையம் , நந்தம்பாக்கத்தில் நடத்துகிறது .
தமிழக ஆளுநர் துவக்கி வைக்கிறார் .
முன்னணி உள்நாட்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன.
மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க தேசிய வங்கிகளும் அரங்கம் அமைக்க உள்ளன.
இந்த கல்வி கண்காட்சியில் என்ன படிக்கலாம்… எங்கு படிக்கலாம்…. கல்வி கட்டணம் எவ்வளவு … போன்ற விவரங்கள் கிடைக்கும்
பத்தாம் வகுப்பு படித்து முடித்து ஒரு வருடம் பவுண்டேஷன் கோஸ் முடித்து விட்டு நேரடியாக இளங்கலை படிப்பு மற்றும் முதுகலைபடிப்பு படிக்க,
நேரத்தையும் கல்வி கட்டணத்தையும் மிச்சம் செய்வதற்காக மலேசியா கல்வி நிறுவனங்கள் அமைக்கும் அரங்கங்கள் இடம் பெறும்.
வசதி குறைந்தவர்கள் மருத்துவம், பொறியியல், விமானம் ஒட்டுதல், மற்றும் கடல் சார்படிப்புகளை படிக்க ,
உலக தமிழ் வர்த்தக சங்கம் 1 கோடி ரூபாயை கல்வி உதவி தொகையாக (ஸ்காலர்ஷிப்) வழங்க ஏற்பாடுசெய்ய பட்டுள்ளது.
இதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் நன்கொடை அளிக்க உள்ளனர் .
மாணவர்கள் கண்காட்சியில் உடனடித் தேர்வு எழுதி கல்வி உதவித் தொகை பெற வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்களும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கும் நல்வாய்ப்பாக அமையும்.
கல்வி உதவி தொகை மற்றும் சலுகைகள் பெற www.internationaleducationfair.org என்ற பக்கத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்
மேலும் விவரங்களுக்கு 9092475000 | edufair16@gmail.com