அக்செஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்க, அருள்நிதி, மகிமா நம்பியார் , ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன் , அஜ்மல் நடிப்பில்
அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கி இருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள்.
இரண்டு கண்களால் சந்தோஷமாக பார்க்க முடியுமா ? பேசலாம் .
கால் டாக்சி டிரைவருக்கும் ( அருள்நிதி), நர்ஸ் ஆக பணிபுரியும் பெண்ணுக்கும் ( மகிமா) காதல் .
ஒரு பெண் எழுத்தாளரின் (லக்ஷ்மி ராம கிருஷ்ணன்) அறிமுகம் அவனுக்கு கிடைகிறது.
அந்தப் பெண் ஒருநாள் வேறொரு கால் டாக்சியில் பயணிக்க , அவளை அந்த வேறொரு டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயல ,
அப்போது அங்கே வரும் இன்னொருவன் ( அஜ்மல் ) காப்பாற்றுகிறான் . அதனால் அவனிடம் அவள் நட்புடன் பேச, அவனோ காதல் காமம் என்று கோரமுகம் காட்டுகிறான் .
காதலனிடம் சொன்னால் சண்டை வரும் என்று அவள் பொறுமை காக்கிறாள்.
உண்மையில் அவன் முகநூல் தகவல்களை கொண்டு , சபலிஸ்ட் ஆண்களுக்கு தன் கூட்டாளி பெண்களை அனுப்பி மயக்கி, பணம் பிடுங்கும் நபர் .
அதற்காக கொலை வரை செய்ய அஞ்சாதவன் . அவனிடம் சிக்கி தடுமாறும் ஆண்கள் பலர்
நாயகி பிரைவேட் நர்ஸ் ஆக செல்லும் ஒரு வீட்டுப் பெண்மணியின் கணவனும் அப்படி சிக்கிய ஆண்களில் ஒருவன் . தவிர மனைவியைக் கொடுமை செய்பவன்.
ஒரு நிலையில் காதலியின் பிரச்னை உணர்ந்த நாயகன் , காரணமான அந்த காமுகனை அடிக்க அவன் வீட்டுக்குப் போக,
அங்கே அந்த காமுகனின் பெண் கூட்டாளி கொலை செய்யப்பட , போலீஸ் காதலனை கைது செய்கிறது .
போலீசிடம் இருந்து தப்பும் நாயகனின் தேடல் கடைசியில் எப்படி முடிந்தது என்பதே இந்த இரவுக்கு ஆயிரம் கண்கள். ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு நடக்கும் சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் வழியே,
வெவ்வேறு சமயங்களில் வரிசைப் படுத்தும் நான் லீனியர் பாணியிலான திரைக்கதையே படத்தின் முக்கிய அம்சம் .
முன்னரே காட்டப்பட்ட சம்பவத்தை பின்னால் நாம் எதிர்பாராத கணத்தில் கொண்டு வந்து சேர்ந்து முடிச்சுப் போடும் உத்தி,
எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள் திரைக்கதையின் சிறப்பம்சம் .
ஆரம்பம் முதல் கடைசி வரை நிதானமாக அழுத்தமாக அமைந்த படமாக்கல் பாரட்ட வைக்கிறது .
அருள் நிதியும் மகிமாவும் மிக அழகாகப் பொருந்தி இருக்கிறார்கள் . அருமை .
ஆனந்த ராஜ் காமெடியில் பாஸ் மார்க் வாங்குகிறார் .
இசையும் ஒளிப்பதிவும் வெகு சிறப்பு .
ஒரு நிலையில் ஓவராக வந்து கொண்டே இருக்கும் திருப்பங்களும், மிக கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயமும் கொஞ்சம் அலுப்பை தரலாம் .
எனினும் அந்த கிளைமாக்ஸ் எழுத்தாளரின் விசயமும் அதைத் தொடர்ந்து வரும் பூடகமாக ரத்தத் திருப்பமும் சபாஷ் !
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462