லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்கொயர், ஜெகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட், சுதன் சுந்தரத்தின் பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் இணைந்த தயாரிப்பில் இளம் நடிகர் பாரத் , சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் நடிப்பில் நிரஞ்சன் இயக்கும் படம் மிஸ்டர் பாரத் .
ஏ வி எம் தயாரிப்பில் ரஜினி , சத்யராஜ், அம்பிகா நடிக்க எஸ் பி முத்துராமன் இயக்கி 1986 இல் வெளிவந்த படம் மிஸ்டர் பாரத். திரிசூல் என்ற இந்திப் படத்தின் ரீமேக் அது.
ஆனால் இந்த மிஸ்டர் பாரத் ?
பாரத் என்ற இயல்பான இளைஞனின் வாழ்வில் நடக்கும், நகைச்சுவையும் கலந்த சம்பவங்கள்.தான் இந்தப் படம் என்கிறார் இயக்குனர். நிரஞ்சன். இந்த அணி யூ டியூப் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றவர்களின் அணி
பாரத்தும் நிரஞ்சனும் சேர்ந்து படம் பற்றி ஆர்வமாகப் பேசினார்கள்.
“இது ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட படம். பாரத் என்ற இளைஞனுக்கு நடக்கும் சம்பவங்கள்தான் படம்.பல சமயங்களில் அவன் சீரியசாக இருப்பான் . ஆனால் அவனது சூழல் நமக்கு காமெடியாக இருக்கும்.
டபுள் ஆக்குபன்சி படத்தில் நடித்த சம்யுக்தா விசுவநாதன் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். நாயகனின் நண்பனாக பால சரவணன் நடிக்கிறார்.
முதலில் இந்த படத்துக்கு மாஸ்டர் பீஸ் என்று பெயர் வைக்கலாம் என்று நினைத்தோம். அப்புறம் பாரத் என்பவனின் கதை என்பதால் மிஸ்டர் பாரத் என்று பெயர் வைத்துள்ளோம். இதற்காக முறைப்படி ஏ வி எம் நிறுவனத்திடம் அனுமதி வாங்கியுள்ளோம்.
இந்தப் படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்
படத்தை ஜூலை 23 ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக இருக்கிறோம். அன்று ஜனநாயகன் வருவதாக இருந்தால் தள்ளிப் போகும் ” என்கிறார் .
பின்னே ஜனநாயகனுக்கு வேண்டியவரும் சேர்ந்து தயாரிக்கும் படம் ஜனநாயகன் வரும் நாளிலா வரும் ?