திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமார் மற்றும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இணைந்து தயாரிக்க, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிக்க அறிமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்கி இருக்கும் படம் இன்று நேற்று நாளை.
இன்று காதல் நட்பு என்று வாழும் சிலர் டைம் மெஷின் ஏறி, நேற்றுக்கும் அதாவது பழைய காலத்துக்கும், நாளைக்கும் அதாவது இன்னும் பல வருடங்களுக்கு பிறகு இருக்கப் போகிற எதிர்காலத்துக்கும் போகும்போது என்ன நடக்கிறது என்ற அடிப்படையில், முன்னும் பின்னும் கதை பாயும் படம் இது .
ப டத்தில் இந்த டைம் மெஷின் விஷயத்தை விளக்கும் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார் ஆர்யா .
படம் பற்றி சொல்லும் இயக்குனர் ரவிகுமார் “டைம் மெஷின் பற்றிய படங்கள் நமக்கு புதிதல்ல . ஆங்கிலத்தில் நிறைய வந்துள்ளது . இந்தியப் படங்களிலும் வந்துள்ளது . ஆனால் அதை வைத்து எனக்குரிய பாணியில் கதை அமைத்து இயக்கி இருக்கிறேன்.
டைம் மெஷின் என்ற கான்செப்டை வைத்து நேற்றைய தினம் முதல் பல்லாயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கியும் போகலாம். நாளை என்ற தினம் முதல் பல்லாயிரம் ஆண்டுகள் வரை முன்னாலும் போய் கதை சொல்லலாம்,
நான் இறந்த காலத்தை நமது சுதந்திரப் போராட்ட காலம் என்றும் எதிர்காலத்தை 2065 என்றும் வைத்துக் கொண்டுள்ளேன் .
அப்படி ஒருவர் டைம் மெஷின் ஏறி போகும்போது அந்த பழைய காலத்திலும் எதிர்காலத்திலும் இருக்கும் தன்னை (அதாவது பயணப்படுகிற மனிதர் அந்தக் கால கட்டத்தில் அங்கே இருக்கும் அதே மனிதரை) உரசி விடக் கூடாது . அப்படி உரசினால் நிகழ்கால நினைவுகள் மறந்து விடும் என்ற சிக்கலின் அடிப்படையில் கதை போகிறது .
இந்தப் படத்தின் கதையை நான்கு விதமாக எழுதி சி.வி.குமார் சாரிடம் கொடுத்தேன்.
படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இது புது அனுபவமாக இருக்கும். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு ரசிகரும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப டைம் மெஷின் குறித்து சுயமாக கற்பனை செய்யும் அனுபவத்தை இந்த படம் தரும் ” என்றார்.
வரும் 26 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது