பல ஊர்களிலும் சினிமா ஆர்வத்தில் குறும்படங்களை இயக்கி வருகிறார்கள் இளைஞர்கள் .. சில குறும்பட இயக்குனர்கள் இன்று தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள் .
அந்த வகையில் இன்டிபெண்டன்ட் திரைப்படங்கள் எனப்படும் தனித் திரையிடல் படங்கள் இந்தியாவில் குறைவு ,அதற்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட்டிங்கும் இல்லை.
வெளிநாடுகளில் இத்தகைய படங்களைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் கட்டுமான வேலைப்பிரிவின் உதவி மேலாளராகப் பணிபுரியும் மகேஷ்வர பாண்டியன் என்பவர்,
‘இயக்குநன்’ என்கிற இண்டிபெண்டன்ட் படத்தை எடுத்திருக்கிறார் …
படத்தை பற்றி மகேஷ்வர பாண்டியன் சொல்லும்போது “.சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மற்றும் அது சார்ந்த வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டு.
அதனால் வேலையில் சேர்ந்து ஓரளவுக்கு வருமானத்தை நிலைப்படுத்திய பின்னர், ஸ்ரீதர் என்பவருடன் இணைந்து ‘அகமுகம்’ என்ற குறும்படத்தை இயக்கினேன்.
அது தந்த அனுபவமும், தன்னம்பிக்கையும் தனியாக ஒரு படத்தை இயக்கும் தைரியத்தைக் கொடுத்தன. ”
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று படப்பிடிப்பில் ஈடுபடுவோம். தினமும் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு 6 மணிக்கு மேல் திரைப்பட வேலைகளில் உட்காருவேன்.
அந்த வாரம் எடுத்த காட்சிகள் சார்ந்த வேலைகள் இரவு 2 மணி 3 மணி வரை நீளும். படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே வேலை பார்த்துக்கொண்டே படத்துக்காக உழைத்தவர்கள்தான்.
படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே முழுநேரக் கலைஞர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிப்பது சவாலாக இருந்தது.
சுமார் 5 மாதங்களில் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டோம். இது 65 நிமிடங்கள் ஓடக்கூடிய சைக்கலாஜிக்கல் ஃபேன்டஸி இன்டிபெண்டன்ட் திரைப்படம்.
படத்தை துபாயில் வாழும் சாய் என்ற நண்பர் தயாரித்திருக்கிறார்.
இன்டிபெண்டன்ட் திரைப்படங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட்டிங் இல்லை. இப்படியொரு விஷயம் இருக்கிறது என்பதே நம்மவர்களுக்குத் தெரிவதில்லை.
அதை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை ஆரம்பித்திருக்கிறோம்.
மற்ற துறைகளில் இருந்துகொண்டேயும் திரைப்படம் எடுக்க முடியும் என்பதை உணர்ந்து, இன்னும் பலர் திரையுலகில் நுழைய வேண்டும் என்பதே எங்களின் ஆசை” என்கிறார் மகேஷ்வர பாண்டியன்.
இப்போது விமர்சனம் ….
சற்று இயல்புத் தன்மை குறைந்தவராக சித்தரிக்கப் படும் சினிமா இயக்குனர் ஒருவர் (ஈஸ்வர்). அவர் மனைவி அவரை விட்டு ஓடிப் போய் விட்டார் .
இயக்குனர் முதல் படமாக எடுத்த ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம் நல்ல பெயர் வாங்கி இருந்தாலும் அது சிகப்பு ரோஜாக்கள் படத்தின் உல்ட்டா, , காப்பி அடித்த படமே என்றும் பெயர் வாங்கி இருக்கிறது .
அந்தப் படத்தில் வரும் சைக்கோ கேரக்டர் அவருக்கு உணர்வாகவும் பார்க்கும் நமக்கு உருவமாகவும் அவரோடு இருக்கிறது . அந்த சைக்கோ கேரக்டரில் நடித்த நடிகனின் உருவத்திலேயே நமக்கு காட்டபடுகிறது .
இந்நிலையில் அந்த நடிகன் (சேதுபதி) இயக்குனரிடம் தனது அடுத்த படத்துக்கு வாய்ப்புக் கேட்கிறான் . ஆனால் இயக்குனர் மறுக்க , அவன் கோபித்துக் கொண்டு போய் விடுகிறான் .
ஆனால் அந்த சைக்கோ கேரக்டரின் — நாம் பார்க்கும் உருவம் தொடர்ந்து இயக்குனர் உடனேயே இருக்கிறது .
சாலையில் தான் பார்த்த ஒரு மனிதனின் உருவத்தை வைத்து அந்த கேரக்டருக்கு அன்பு(லிங்கேஷ்) என்ற பெயர் வைத்து அடுத்த கதையை உருவாகுகிறார் இயக்குனர் .
இப்போது அன்பு கேரக்டரும் அவருக்கு உணர்வாகவும் நமக்கு உருவமாகவும் தெரிகிறது .
இரண்டாவது படத்தின் கதை விசயத்தில் சைக்கோ, அன்பு ஆகிய இரண்டு கேரக்டர்களும் தங்கள் கருத்துக்களை இயக்குனருக்குள் திணிக்க ,
அவற்றோடு போராடி அவர் அந்தக் கதையை எந்த வகையில் உருவாக்கினார் . இந்த காதல் கதைக்குள் சைக்கோ கேரக்டர் வந்ததா? இல்லையா ?
–என்பதே இந்தப் படம்
பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நன்றாக நடித்து இருக்கும் நடிகரை “கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார் ” என்று பாராட்டுவோம் .
ஆனால் ஒரு கதை – திரைக்கதை அமைக்கும் போது ஒரு படைப்பாளி அந்த கேரக்டர்களுடனேயே வாழ்கிறான் என்பதுதான் உண்மை .அந்த உணர்வுக்கு உருவம் கொடுத்து,
அதில் காதல், திரில்,செண்டிமெண்ட் எல்லாம் கலந்து படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் .
சிக்கலான மனோதத்துவக் கதை .ஆனால் அதை மிக தெளிவாக சொல்கிறார் .
காதலன் காதலிக்குள் சண்டை என்று முடிவு செய்து விட்டு , காரணம் கிடைக்காத நிலையில் காதலன் காதலி கேரக்டரை சண்டை போடச் சொல்லி விட்டு ,
”ஏன்டி கோபப்படுற?’ என்ற காதலனின் கேள்விக்கு,
எஸ் ஜே சூர்யாவின் அப்படி அப்படி இப்படி இப்படியைப் பயன்படுத்தி, “நீ அப்படி அப்படி பண்ணா நான் இப்படி இப்படிதான் பண்ணுவேன் “என்று சண்டை போடுவது இன்டல்லகசுவல் காமெடி .
பக்கத்து வீட்டு சிறுவன் சம்மந்தப்பட்ட செண்டிமெண்டும் அருமை .
சாந்தன் அநேப ஜெகனின் இசை மிக சிறப்பு . மனோராஜாவின் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது
சைக்கோ கேரக்டர், அதில் நடித்தவர் உருவத்திலேயே இருக்க , அன்பு கேரக்டர் மட்டும் சாலையில் பார்த்தவன் உருவமாகவும் அந்த கேரக்டரில் நடிப்பவர் வேறு நபராகவும் இருப்பது .
அன்புவின் மனைவி , பக்கத்து வீட்டு பெண்மணி, அவரது மகன் என்று எல்லோரும் கேரக்டர்கள் வேறு உருவமாகவும் நடிப்பவர்கள் வேறு உருவமாகவும் இருப்பது ….
..
இயக்குனரை பின் தொடரும் அன்பு, அவன் மனைவி கேரக்டர், சிறுவன் , மற்றும் அவன் அம்மா கேரக்டர்களில் அன்பு கேரக்டர் மட்டுமே உரிமையாக இயக்குனருடன் வீட்டுக்குள் வருவது ..
இப்படி படத்தில் வரும் பல விஷயங்கள் அர்த்தமுள்ளவை . சிறப்பு சிறப்பு .
அதே நேரம் ….
தனது கேரக்டர்களோடு வாழும் ஓர் இயக்குனரை அப்நார்மல் ஆள், அதான் அவன் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா என்று காட்ட வேண்டிய கட்டாயம் என்ன ?
ஒரு படைப்பாளிக்கும் கதை உருவாகும் போது அவனுக்கு ஏற்படும் உணர்வுகளை உருவம கொடுத்து காட்டுகிறோம் என்றே சொல்லி இயக்குனரை இயல்பாகவே காட்டி இருந்தால்,
இன்னும் உயர்ந்த தன்மை படத்துக்கு கிடைத்து இருக்குமே.
அதே போல இப்படி ஓர் வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்டு , கடைசியில் இன்னொரு கேரக்டரின் நுழைவோடு படத்தை முடிப்பதும் ஒரு தட்டையான உணர்வை தருகிறது .
இந்த கேரக்டர்களின் கதை ஓர் அர்த்தமுள்ள முடிவை கேட்கிறது . அது இல்லாதது ஏமாற்றமே .
எனினும்
ஒரு புது இண்டிபெண்டன்ட் பட இயக்குனர் இப்படி ஒரு வித்தியாசமான கதைக் களத்தை எடுத்து சிறப்பாக ஒரு படம் கொடுத்து இருப்பது போற்றுதலுக்கு உரியது .
வாழ்த்துகள் !
படத்தின் முன்னோட்டம் இணைப்பு
————————————————————