மக்களின் அரசியலில் ‘ஜோக்கர்’

joker 4

தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜோக்கர்’ படம் ஆகஸ்ட் 12-ல் வெளியாக உள்ளது. 

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாயகி காயத்திரி கிருஷ்ணன் பேசியபோது “எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என் கேரக்டர் ரொம்ப போல்டான கிராமத்து பெண் கேரக்டர்.

பொதுவா கிராமத்து பெண்கள் என்றால் போராட்டம் குணம்  தைரியம் இல்லாமல்தான் காண்பிப்பார்கள். 

ஆனால் என்னுடைய கதாப்பாத்திரம் அதை மாற்றி அமைக்கப்பட்டு  உள்ளது. இந்த படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார் 

ஆர்ட் டைரக்டர் சதீஷ் பேசும்போது” ஊரு பக்கம் நடக்குற கதை. நம்ம ஊரு பக்கம் நடக்குறதால வொர்க் செய்வதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது. அரசு அலுவலகங்கள் சம்பந்தமான செட் நிறைய உள்ளது. 

joker 5

ஒரு ஒயின் ஷாப்  செட் ஒன்னு போட்டோம். ஒயின் ஷாப்  செட் போட்டதும், உடனே ஒருத்தர் வந்து குவாட்டர் கேட்டார். இது படப்பிடிப்பிற்காக போடாப்பட்ட செட் விற்பனைக்கு இல்லைன்னு சொன்னோம்.

‘இருந்துட்டு போகட்டும்; அவங்களுக்கு மட்டும் தான் குடுப்பியா, நான் மட்டும் என்ன ஒசிலையா கேக்குறேன். எனக்கும் குடு’ என கடைசி வரை சொல்ல வந்ததை புரிந்து கொள்ளாமல் சென்றார்.

இது போல் நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் நடந்தது.” என்றார் 

எழுத்தாளர் பாவா செல்லத்துரை தன் பேச்சில் “இந்தப் படம் தருமபுரி மண் சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் கதைக் களமாக டெல்டா  ஏரியாவை காட்டியுள்ளனர்.

நெல்லை  கோவை என்று காட்டி உள்ளனர் 

joker 3

ஆனால்  தர்மபுரியை யாரும் காட்ட முயலவில்லை. ஆனால் இந்த படத்தில் காட்டியுள்ளனர். தருமபுரி பகுதியில் உள்ள மோசமான குடிநீர் காரணமாக

அங்குள்ள மக்களின் பற்களில் ஒரு மஞ்சள் கறை எல்லோருக்கும் இருக்கும். 

அந்த  மஞ்சள் கறையைக் கூட இயக்குனர் ராஜு முருகன் விட்டு வைக்கவில்லை . இது உண்மையிலேயே ஒரு உலகத்தரம் வாய்ந்த படம்” எனக் கூறினார் 

நாயகி ரம்யா பாண்டியன் பேசும்போது “இயக்குனர் எனக்கு ரொம்ப ஃபிரீடம் கொடுத்தார். அதனாலேயே எனக்கு நடிப்பதற்கு இயல்பாக இருந்தது ” என்றார் 

மிகவும் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிய நாடகக் கலைஞரும் சினிமா நடிகருமான மு.ரா ” 1990-களில் இருந்து நான் நடிக்கிறேன்.

jiker 2

இதுவரை நான் எந்தப் படத்தையும் பார்த்து பெருமிதம் கொண்டதில்லை. ஆனால் இந்தப் படத்தை  என் படமாக பார்க்கிறேன். 

நான் என்ன எல்லாம் வெளியில் பேச நினைத்தேனோ, அந்த பிரச்சனைகளை எல்லாம் இந்தப் படத்தின் மூலம்  பேசியுள்ளேன். இது என்னுடைய படம் போல் உணரவைத்த ராஜு முருகனுக்கு நன்றி.” என்றார் 

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் பேச்சில் “படத்துல லைவ் மியூசிக்தான் போட்டுள்ளோம் சவுண்ட் மிக்சிங்  செய்யவில்லை.

இந்த மாதிரி ரியல் கேரக்டர்கள் நடிச்ச படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும்” என்றார் 

இயக்குனர் ராஜு முருகன் பேசியபோது” சமூக வலைதளங்களில்  தைரியமாக அரிசயல் பேசும்  அளவிற்கு மக்கள் முன்னேறி உள்ளனர். ஆனால் சினிமாவில் அது இன்னும் வரவில்லை. 

joker

ஏன் இங்கு மட்டும் நுழையவில்லை. அதை நுழைத்து படத்தை மிகத் தைரியமாக எடுக்க வேண்டும் என இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை தயார் செய்தேன்.

கலைஞர்களை ஜாதி, அரசியல் ரீதியாக அணுகக்கூடாது. அவர்களை கலைஞர்களாக தான் பார்க்க வேண்டும்

படத்துக்கு நாங்க நினைச்ச மாதிரி எந்த பிரச்சனையும் இல்லை. சென்சார் கிடைக்காதுன்னு தான் நினைச்சோம். ஆனால் யு சர்டிபிகேட் கிடைச்சது. அரசியல் கட்சிகள் எதுவும் எங்களை மிரட்ட வில்லை. 

joki

சென்சார் அதிகாரிகள் கெட்ட வார்த்தைகள் மற்றும் வன்முறை காட்சிக்கு மட்டும் கட் கொடுத்தனர். எல்லோருமே அரசியல் பேசணும் என்கிற கருத்தை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இது தேர்தல் சமயத்தில் வருவதை விட சுதந்திர தினத்தில் வருவது இன்னும் நல்லது ” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *