அண்டா என்பது சாதராண விசயம் அல்ல .
அருணாச்சலம் படத்தில் அண்டாக்களை கவிழ்த்தே ஆயிரக்கணக்கில் சிவலிங்கம் உருவாக்கி அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தான்டா பாடல் எடுக்கப்பட்டது .
அப்படிப்பட்ட அண்டாவை காணோம் என்கிறார்கள் ஒரு படத்தின் தலைப்பாக !
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே சதீஷ்குமார தயாரிப்பில், சி வேல்மதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் அண்டாவ காணோம்
இந்தப் படத்துக்காக இன்று வெளியிடப்பட்டு இருக்கும் முதல் பாடலில் இரண்டு விஷேஷம் .
ஒன்று ….
நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பாடியிருக்கும் பாடல் இது .இரண்டு…. . கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அண்டாவின் பங்கு என்னவென்பதைச் சொல்லும் பாடலாம் இது . இந்தப் பாடலை மதுரகவி எழுத, அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.
ம்ஹும் .. மூன்றாவதாகவும் ஒரு விஷேஷம் உண்டு .
திமிரு படத்தில் குமுறிக் குமுறி , காதலுக்குரிய வில்லியாக நடித்து விட்டு பிறகு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து போன ஸ்ரேயா ரெட்டி,
இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் . அவருடன் புதுமுகங்கள் இளையராஜா, சார்வி லஸ்யன், வினோத் முன்னா, அருண் பிரஜித், ஷரவண சக்தி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அண்டாகாகசம் … அபுக்கா ஹுக்கும் .. ரசித்திடு சீசேன் !