அம்மா கிரியேஷன்ஸின் வெள்ளி விழா வருடப் படம்

amma 5

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் வெள்ளி விழா வருடத்  திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் .” ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ”

அதர்வா மற்றும் நான்கு கதாநாயகிகள் ரெஜினா கசன்றா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரணிதா சுபாஷ் , அதீதி போஹன்கர் நடிப்பில்

ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை டி. இமான் .
இதன் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொலிவோடு 
கம்பீரமாக காட்சியளிக்கும் புகழ்பெற்ற,சென்னை கலைவாணர் அரங்கத்தில் 
நடக்கும் முதல் சினிமா சினிமா நிகழ்சசியாக நடந்தது . 

இதில் அதர்வா முரளி , சூரி , ரெஜினா கசன்றா , அதீதி போஹன்கர் ,
இசையமைப்பாளர் டி.இமான் , இயக்குநர் ஓடம் இளவரசு , 
பிக்பிரிண்ட் கார்த்தி , 2எம்.பி ரகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா " ஜெமினிகணேசனும் 
சுருளிராஜனும் திரைப்படத்தை பார்த்தேன். இந்த படத்தை தயாரித்தது 
பெருமையாக உள்ளது. 

இந்த படத்தை பொறுத்தவரை எந்த வித குறையும் சொல்ல முடியாத 
ஒரு படம் என்பது எனக்கு மிக மகிழ்ச்சி. 
இந்த படத்தை யார் பார்த்தாலும் எந்த குறையும் சொல்ல முடியாது. 

என்னுடன் இந்த படத்தை 10பேர் பார்த்தார்கள்.  அவர்கள் அனைவரும் 
இப்படத்தின் நிறையை மட்டும்தான் கூறினார்கள். இந்த படத்தில் 
பணியாற்றிய அனைவரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். 

amma 4
முக்கியமாக கேமரா மேன் சரவணன் இப்படத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 
அவருக்கு இது பெயர் சொல்லும்படமாகவும் , நிறைய வாய்ப்புகளை 
ஏற்படுத்தி தரும் படமாகவும் இருக்கும். 

இந்த படத்தை போன வேகமே தெரியாமல் போகும் படி எடிட் செய்தவர் 
எடிட்டர் பிரவீன். இப்படம் ஓடக்கூடிய நேரம் 2மணி நேரம் 14 நிமிடம் 
என்பது இப்படத்துக்கு மிகப்பெரிய பலமாகும். 

இப்படம் அடைய போகும் வெற்றிக்கு இது முக்கிய காரணமாகும். 
இதை சரியாக செய்த எடிட்டர் பிரவீனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 
படத்தில் ஒவ்வொரு பிரேமும் அழகாக இருப்பதற்கு முக்கிய காரணம்

கலை இயக்குநர் வைரபாலன். மிக குறைவான செலவில் தரமான
 படத்தை தந்துள்ளார். 

இசையமைப்பாளர் இமானின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய 
பலம் சேர்க்கும். ஏற்கனவே சிங்கிள் பாடல்கள் மிகப்பெரிய
வெற்றி பெற்றுள்ளது. 

கதையோடு பயணித்து அவர் பாடல்களை தந்துள்ளார் என்பது
படத்தை பார்க்கும் போது நமக்கு தெரிகிறது அவருக்கு நன்றி. 

படத்துக்கு விஷுவல் உணர்வோடு பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர்
யுகபாரதிக்கு நன்றி.

இப்படத்தில் நடித்த நான்கு கதாநாயகிகளுக்கும் இப்படம் 
அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். 

இப்படம் நடிகர் சூரியின் வாழ்க்கையில் அவருக்கு மிக முக்கியமான 
படமாக இருக்கும். சூரியின் பொறுமை அவருடைய கடமையை 
சரியாக செய்தது. 

அவருடைய கெட்டப் மற்றும் டப்பிங்கில் அதிக கவனம் செலுத்தி
அவர் செய்துள்ள வேலை என்று எல்லாமேஇந்த படத்துக்கு 
மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமையும். 

நான் ஏற்கனவே கூறியது போல் அதர்வாவுக்கு நல்ல படத்தை 
கொடுத்துள்ளேன். அதர்வாவுக்கு நல்ல படம் கொடுப்பேன் என்று 
ஒரு மேடையில் கூறி இருந்தேன். 

அதே போல் இந்த படம் அதர்வாவுக்கு சிறப்பான படமாக
அமைத்துள்ளது. நண்பன் முரளிக்கு எப்போதும் நான் 
கடமைப்பட்டுள்ளேன்.

கண்டிப்பாக அதர்வாவின் வாழ்க்கையில் இது முக்கியமான திரைப்படம்.
இது வரை அதர்வா நடிப்பில் வெளிவந்தபடங்களில் இதில் மிக சிறந்த
நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். 

இப்படி ஒரு அதர்வாவை இது வரை இந்த உலகம் கண்டிருக்காது. 
நிச்சயமாக என் நண்பன் முரளிக்கு பெருமையான படமாக இது இருக்கும். 

இதை நான் தயாரிக்க முக்கியமான காரணம் பிக் பிரிண்ட் கார்த்திதான். 
அவர்தான் இயக்குநர் இளவரசை என்னிடம் கூட்டி வந்து இந்த கதையை 
என்னை கேட்க வைத்தார்.

amma 3
இந்த படத்தை நாங்கள் தயாரிக்கும் போது எங்களோடு ஆரம்பத்தில் 
இருந்து எங்களோடு இருந்த 2MB ரகு மற்றும் சந்திரன் ஆகியோருக்கு 
நன்றி. 

இந்த படம் தயாராக எல்லா வகையிலும் என்னோடு இருந்த சகோதரன்
தீலிப்புக்கு நன்றி. அவருக்கு இதுமகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். 

இந்த படத்தின் தயாரிப்பில் எங்களோடு வேலை பார்த்த மகேந்திரன்
மற்றும் டீமுக்கு நன்றி. அவரை பற்றிசொல்வது என்னை பற்றி 
நானே சொல்லுவது போல் ஆகிவிடும்.

திரையுலகில் நான் எத்தனையோ பேரை அறிமுகம் செய்துள்ளேன். 
அதில் இப்படத்தின் இயக்குநர் ஓடம் இளவரசுவை அறிமுகம் செய்தது
 எனக்கு மிகப்பெரிய பெருமையாகும். 

அவர் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய பரிசு. அவரை எங்களுக்கு 
சொன்னது போலவே இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்,

இது முழுக்க முழுக்க முழுமையான இயக்குநரின் படைப்பு என்று கூறுவேன்.

இயக்குநர் பாக்கியராஜுக்கு இருந்தது போல் இவருக்கும் 
தனியாக ஒரு ஸ்டைல் உள்ளது. படத்தில் பணியாற்றிய
என்னுடைய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ''என்றார் 

FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியபோது, "இப்படத்துக்கு 
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ன்ற மிகச் சிறப்பான தலைப்பு 
தமிழில் உள்ளது.அதை GGSR என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும். 

amma 6
வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது.தமிழ் மேல் பற்றோடு
நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும்.
தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் 
தமிழில் பெயர் வைக்க வேண்டும். 

தயாரிப்பாளர் சிவா எனக்கு அழைப்பிதழ் வைக்க வந்திருந்தபோது 
அந்த அழைப்பிதழை பார்த்த நான் இசையமைப்பாளர் இமானுக்கு 
சம்பளமே கொடுக்க வேண்டாம். 

அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள் என்றேன் . 

ஏனென்றால் நான்கு கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் 
புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருந்தது 

படத்தின் பாடலை கேட்டவுடன் அவருக்கு மேலும் நிறைய சம்பளம்
கொடுக்கலாம் என்று எனக்கு தோன்றியது. முக்கியமாக வெண்ணிலா
 தங்கச்சி பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா க்ரியேஷன் 
சிவாதான்.அவர்தான் தயாரிப்பாளர் ராவுத்தரிடம் பேசி 
எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார். 

அந்த படத்தை இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது .
அந்த சமயத்திலும்பேசி மீண்டும் எனக்கு முதல் பட வாய்ப்பை 
வாங்கி தந்தவர் சிவா 
அவருக்கு நான் எப்போதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் 

தயாரிப்பாளருக்கு போட்ட முதல் ஒரு படத்தில் வரவில்லை என்றால் 
அடுத்த படம் எடுப்பது கஷ்டம் 

amma 1
அதை சரியாக பண்ண வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவருக்கும் 
இருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் 25% தயாரிப்பு செலவை 
குறைத்துள்ளோம். இது தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் செய்துள்ள சேவை. 

நாம் அனைவரும் சண்டை போட்டால் கூட சினிமாவை காப்பாற்ற முடியாத 
நிலைமையில் நாம் இப்போதுஇருக்கிறோம். எல்லோரும் ஒன்றாக
 இருக்கும்போதே சினிமாவை காப்பாற்ற முடியவில்லை. 

தயாரிப்பாளருக்கு வருமானம் வரக்கூடிய வாசல் எல்லாம் அடைத்துவிட்டது.
தியேட்டரில் மட்டும்தான் இப்போது வருமானம் வருகிறது.

நான் ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றேன் .120 ருபாய் படத்தின் டிக்கெட்.
ஆன்லைனில் என்னிடம் 180ருபாய் கலெக்ட் செய்கிறார்கள். 

மொத்தம் நான்கு டிக்கெட் புக் செய்தேன்  600 ரூபாய் வாங்கினார்கள். 

நான் என்னுடைய குழந்தைகளுடன் படத்துக்கு சென்றேன் 
மொத்தம் 1200 ரூபாய் கேன்டீன் சார்ஜெஸ் வந்தது.

படம் முடித்து வந்த பிறகு பார்க்கிங்கில் 160 ருபாய் வாங்கினார்கள்.
மொத்தமாக 2400 ரூபாய் ஒரு படம் பார்க்கசெலவாகிறது. 
ஆனால் தயாரிப்பாளர்களுக்கு வெறும் 240 ரூபாய் தான் லாபமாக வரும்.

amma 2
அனைத்து வர்த்தக சபைகளையும் ஒன்றாக இருந்து 
இதை சரி செய்ய வேண்டும். 

தமிழ் சினிமா நன்றாக உள்ளது.ஆனால் தமிழ் திரைப்பட 
துறை நன்றாக இல்லை.தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்
 தமிழ் சினிமா நன்றாக இருக்கும்"என்றார்.

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீட்டு 
விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி
திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழா நடந்தது

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு , படத்துக்கு இசையமைக்கும் 
சத்யா ராஜ் , ரம்யா கிருஷ்ணன் ,சிவா , 
கயல் சந்திரன் , ரெஜினா கசன்றா , நிவேதா பெத்துராஜ் ,
சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

amma 7

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *