கதாநாயாக ஜூலி நடிக்கும் “ஜூலியும் 4 பேரும்’

juli 7

காவ்யா சினிமாஸ் சார்பில் எஸ் பிரேம்குமார் தயாரிக்க, அமுதவாணன் , ஜார்ஜ் விஜய், யோகானந்த் , ஆல்யா மானசா ஆகியோர் நடிக்க,

சதீஷ் ஆர் வி என்பவர் நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம் ஜூலியும் நாலு பேரும் ஜூலி என்பது படத்தின் கதாநாயகியின் பெயர்தான் . ஆனால் அது மட்டுமல்ல கதாநாயின் பெயரும் அதுவே .

கதாநாயகியை விட இந்தக் கதா நாய்தான் படத்தில் முக்கிய ஸ்டார்

juli 6

படம் பற்றி கூறும் இயக்குனரும் ஹீரோக்களில் ஒருவருமான சதீஷ் ஆர் வி “கதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிறது.

அமெரிக்காவில் கடத்தப்படும் இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட “ஜூலி” என்கிற ஓர் அதிர்ஷ்ட நாய்,

நாய்க் கடத்தல் கும்பலின் தலைவனான வில்லன் மூலமாக இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு,
சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபருக்கு விற்கப்படுகிறது.

juli 5

மறுபுறம், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில் வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகரான ஒரு ஆட்டோ ஓட்டுனரும் , நண்பர்களாகின்றனர்.

வேலை தேடிவந்த மூவரும் சென்னையில் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்திடம்  பணத்தைப் பறிகொடுக்கின்றனர்.

விட்ட பணத்தை குறுக்கு வழியிலாவது சென்னையிலேயே சம்பாதிக்க எண்ணி, “ஜூலி நாயை” வாங்கிய தொழிலதிபரின் மகளிடமிருந்து அதை கடத்துகின்றனர்.

juli 3

அந்த கோடிக் கணக்கில் மதிப்புள்ள கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களை துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு நபருக்கு விற்பதற்காக,

நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, நாய் பலர் கைக்குப் போகிறது . நாய் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கிறது

அதே சமயத்தில் ஜூலி என்ற பெண் ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை நகைச்சுவையாக எடுத்துச் சொல்கிறது, இப்படம்.

juli 2

அதிர்ஷ்ட நாய் ஜூலி யாரிடம் சேர்கிறது என்பதும், எல்லோரிடமிருந்தும் எப்படி நால்வரும் தப்பிக்கிறார்கள்?                     

விட்ட பணத்தை அடைந்தார்களா? இல்லையா? என்பதையும் பரபரப்புடன் சொல்லும் வகையில் அமைந்த படம் இது.

இந்தப் படமும் சென்னையின் பெருமை பேசும் படம் . பணத்தை இழந்த மூவரும் சென்னையைப் பற்றி மட்டமாக பேச, ஆட்டோ டிரைவர் சென்னையின் சிறப்புகளை சொல்லும் காட்சிகள் இருக்கிறது ” என்கிறார் .

juli 4

ஜூலியாக நடித்து இருப்பது இயக்குனரே சொந்தமாக வளர்க்கும் பீகிள் வகை நாய் . இந்த நாயின் குறைந்த பட்ச விலையே ஐம்பது ஆயிரம் ரூபாய் .
நாயின் காதுகள் இரண்டும் வளைந்து வாயை மறைக்குமாம்  (அப்புறம் எப்படிங்க குலைக்கும் ?’)

சதீஷ் அடுத்து இயக்கப் போகும் படத்தின் பெயர் நாய் சேகர் .

அதுலயாவது….. செலவே வைக்காத , திருடனை விரட்டுற, எஜமானனுக்கு விசுவாசமா இருக்கிற நம்ம நாட்டு நாய்களைப் பத்தி படம் எடுங்கப்பா (அட , நிஜமாவே நான் நாய்களை பத்திதாங்க சொல்றேன் ).

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *