வைல்டு லைஃப் போட்டோகிராபராக ஆண்ட்ரியா நடிக்கும் ‘ கா’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது , 

‘ பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள்.  படம் மே மாதம் வெளியாக உள்ளது.

அதைத்  தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘ கா’ என்று வித்தியாசமாகத்  தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.  

ஒளிப்பதிவு           –        அறிவழகன்

இசை           –        அம்ரிஷ்

எடிட்டிங்     –        கோபிகிருஷ்ணா

கலை           –        லால்குடி இளையராஜா

ஸ்டன்ட்      –        விக்கி

நிர்வாக தயாரிப்பு          –        சங்கர் தயாரிப்பு          –       ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

இணை தயாரிப்பு –       ரவிகாந்த்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  நாஞ்சில்

 படத்தின் பூஜையும் அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் 29 – 04 – 18 அன்று நடந்தது 

சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், 

                                                                                       ஜான் மேக்ஸ் – ஜோன்ஸ்

உலக மக்களுக்கான படம் இது. உலகின் எந்த மொழியிலும் இதை மொழி மாற்றம் செய்து வெளியிடலாம்.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு மொழிக்காக மட்டும் படம் எடுத்து லாபம் பார்ப்பது சிரமம் .

எனவே நாங்கள் எடுக்கும் எல்லா படங்களையுமே  இப்படி பல மொழி மக்களுக்கும் ஏற்றதாகவே எடுக்கிறோம் ” என்றார்.

இசை அமைப்பாளர் அம்ரேஷ் தன் பேச்சில் , “அது என்னவோ தெரியவில்லை . கதாநாயகிகள் ஹீரோயிசம் செய்து நடிக்கும் எல்லா படங்களுமே என்னிடம்தான் வருகின்றன .கர்ஜனை உட்பட திரிஷா நடிக்கும் இரண்டு படங்கள், சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி , இப்போது ஆண்ட்ரியாவின் இந்தப் படம் என்று இந்த வரிசை நீள்கிறது .

இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை . எனவே முழு உழைப்பும் பின்னணி இசையில் போடுகிறேன் ” என்றார் 

 இயக்குனர் நாஞ்சில் பேசுகையில் , “முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.

                                                       இயக்குனர் நாஞ்சில்

கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறோம்.

(ஆனால் பொதுவில் கா என்ற சொல்லுக்கு சோலை, தோட்டம் என்றே பொருள்.  கான் என்பதே காட்டைக் குறிக்கும் சொல் . இவர்கள் ஏதோ சிறப்பான பொருளில் இந்த சொல்லை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ணுகிறேன் )

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும்  நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ்  நடிக்கிறார்கள் . மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி  திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ளது “  கா “

படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. ” என்றார். 

சோலையாய் செழிக்கட்டும் ‘கா ‘ !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *