அவனி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பூ தயாரிக்க , ஜீவா , ஜெய் , சிவா , நிக்கி கல்ராணி, கேத்தரீன் தெரசா ரோபோ ஷங்கர் நடிக்க சுந்தர் சி இயக்கி இருக்கும் படம் கலகலப்பு 2
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஜீவா ” டிஜிட்டல் சினிமா வந்த பிறகு எல்லா நடிகர்களும் 360 டிகிரிக்கு நடிக்க வேண்டி உள்ளது . அப்படித்தான் நானும் பல படங்களில் மாட்டிக் கொண்டேன் .
ஆனால் சுந்தர் சி சாரின் டைரக்ஷனில் நடித்தபோது முறைப்படி படமாக்கப் படும் ஒரு படத்தில் நடிக்கும் திருப்தி ஏற்பட்டது .அதனால் சிறப்பாக நடிக்க முடிந்தது ”என்றார்.
நிக்கி கல்ராணி தன் பேச்சில் “கலகலப்பான செண்டிமெண்ட், காமெடி , பொழுது போக்கு , உற்சாகம் , கிளாமர் எல்லாம் நிறைந்த படம் இது ” என்றார் .
கேத்தரீன் பேசும்போது ” நான் காசியில் வாழும் தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறேன் .
மிக நல்ல கேரக்டர் . படம் நன்றாக வந்துள்ளது ” என்றார் .
இயக்குனர் சுந்தர் சி தன் பேச்சில் ” பொதுவாக புதிதாக ஒரு கதையை எழுதி இயக்குவது சுலபம் . ஆனால் முன்பே நாமே எடுத்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் .
எனவே சரியான ஒரு கதை அமையாவிட்டால் எடுக்க முடியாது .
கலகலப்பு 2 எடுக்கும் கதை இப்போதுதான் அமைந்தது . ஒரு வித்தியாசமான பின்னணிக்காக காசியை வைத்தேன் . படம் நன்றாக வந்துள்ளது .
நிறைய நடிக நடிகையர் . எல்லோருக்கும் பொருத்தமான கேரக்டர் அமைந்துள்ளது . இதுவும் வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன் . ரசிகர்கள் ஆதரவு வேண்டும் ” என்றார் .