கவலை வேண்டாம் @ விமர்சனம்

kavalai-1

ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, 

ஜீவா, காஜல் அகர்வால்,  சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமிதா , மந்த்ரா ஆகியோர் நடிப்பில்  

‘யாமிருக்க பயமே’ படப் புகழ்  டீகே இயக்கி இருக்கும் படம் ‘கவலை வேண்டாம்’. 
கவலை வேண்டாமா ? பார்க்கலாம் .
படிக்கிற காலத்தில் மேஜிக் போல காதலில் விழும் ஜோடிக்கு (ஜீவா – காஜல் அகர்வால் )  கல்யாண சமயம் முதலே கருத்து  வேறுபாடுகள் . ஒரு நிலையில் அது வெடித்துப் பெரிதாக பிரிந்து வாழ்கின்றனர் . 
இந்நிலையில் நாயகனை  அவனது தோழி ஒருத்தி   (சுனைனா)  விரும்புகிறாள் . 
 
kavalai-2
கணவனை   தேடி வரும் மனைவி  இரு தரப்பு விவாகரத்துக்கு சம்மதம் கேட்கிறாள் . ஒரு வாரம் என்னோடு தங்கி விட்டுப் போனால் தருகிறேன் என்று கணவன்  கூறுகிறான் .  
வேண்டா வெறுப்பாக அவளும் தங்க இருவருக்கும்  இடையில் நல்லதொரு நெகிழ்வுப்  புரிதல் வருகிறது . 
அதே நேரத்தில்தான்,   மனைவி  விவாகரத்துக்குப் பிறகு  இன்னொருவனை  (பாபி சிம்ஹா ) திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பது  கணவனுக்குத்  தெரிய வருகிறது .
 
 மனம் உடையும் அவன் மனைவியை நிரந்தரமாக பிரிய முயல , அந்த மன உடைவை  வளர்த்து,  அவனை மணக்க தோழி  விரும்ப…..  ,மனைவி கணவனை நெருங்க , 
 
kavalai-3
நண்பர்கள் , தோழி , , நாயகி கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் நபர் எல்லோரும் தங்கள் வசதிக்கு ஏற்ப கணவன் – மனைவியை பிரிக்கவோ சேர்க்கவோ முயல…
 
இதுக்கு மேல கதை என்னன்னு கேப்பீங்களா? கேப்பீங்களா ? கேப்பீங்களா ? ம்ம்ம்ம்… அந்த பயம் இருக்கட்டும் ! 
 
என்னத்தைச் சொல்ல ? முதல் காட்சியில் காஜலும் தோழியாக வரும் சுருதி ராமகிருஷ்ணனும் பேசிக் கொண்டே போக , நீளும் அந்தக் காட்சியிலேயே கொட்டாவி வருகிறது . 
 
அப்புறம் இஷ்டத்துக்கு ஓடுகின்றன காட்சிகள் . ஏன் சேருகிறார்கள் . எதற்கு பிரிகிறார்கள் ? கதா பாத்திரங்கள் எல்லோருமே  லூசா ? இல்லை படம் எடுத்தவர்களும் பார்ப்பவர்களும் லூசா ? யாரை யார் நோவது ? கொடுமை !
 
kavalai-5
ஜீவா ,காஜல் எல்லோருமே கடமைக்கு நடித்துள்ளனர் . காஜலை சகிக்க முடியவில்லை . ஒரு கேரக்டரும்  இயல்பாக படைக்கப் படவில்லை . 
 
நாயகனின் அம்மா பிரிந்ததற்கும் , அதன் பிறகு  அவனது  அப்பா வேறு  பெண்ணை மணப்பதற்கும்  கூறப்படும் காரணத்தைக் கேட்கும் போது, கழட்டி அடித்து……க் கொள்ள வேண்டும் போல தோன்றுகிறது 
 
ஜீவா, காஜல் ஆர்  ஜே பாலாஜி பால சரவணன்  உட்பட எல்லோரும்  . வாயைத் திறந்தால் இரட்டை அர்த்தத்தில் ..ம்ஹும் \, ஆபாசமான ஒரே அர்த்தத்தில் பேசுகின்றனர் . கேவலம் . 
 
நல்ல படங்களுக்கு எல்லாம் தேவை இல்லாத காரணம் சொல்லி டார்ச்சர் கொடுக்கும் சென்சார் போர்டு என்ன புல் பிடுங்கிக் கொண்டு இதை எல்லாம் அனுமதிக்கிறது என்றே தெரியவில்லை .
kavalai-6
இந்த ஈனப் பிழைப்புக்கு , வேறு வேலை பார்க்கலாம் . அட தூ …. !
 
வசனத்தை விட்டால் , ஒருவனின் பிறப்புறுப்பில் ஒரு கும்பலே வரிசையாக  வந்து உதைப்பது , இரு ஆண்கள் சண்டை போட சமாதானப்படுத்த வரும் பெண்ணை இருவரும் நடுவில் போட்டு நசுக்குவது…
இதெல்லாம் காமெடியாம் ! மானங்கெட்ட பிழைப்பு !
 
தயாரிப்பளர்களை விடுங்க .. அவங்க வியாபாரிகள் .!
 
யாமிருக்க பயமே என்ற வித்தியாசமான காமெடி படம் கொடுத்த இயக்குனர் டிகே … ஏன் இப்படி கேவலமா போனீங்க ?
 
மொத்தத்தில் கவலை வேண்டாம் … கவலைக்கிடம் !
 
 
 .. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *