விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் @ விமர்சனம்

viru-1

வாவ் 4 ஸ்டுடியோஸ் சார்பில் மேகலா தயாரிக்க, சஞ்சய்,  அருந்ததி  நாயர் , தம்பி ராமையா ஆகியோர் நடிக்க, வின்சென்ட் செல்வா கதை, திரைக்கதை  எழுதி இயக்கி இருக்கும் படம் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்.

சரி.. இவர்களால் ரசிகர்களுக்கு என்ன ? பார்க்கலாம் 
இரண்டு ஊர்களுக்கு இடையே தண்ணீர் பிரச்னை . தண்ணீர் விட வேண்டிய ஊரின் தலைவர் (பாலா சிங்) , தண்ணீர் கேட்கும் ஊரின் தலைவரிடம் (ஜோ மல்லூரி ),
”உங்கள் மகள் நந்தினியை ( அருந்ததி நாயர் )  என் மகனுக்கு பெண் கொடுத்தால் தண்ணீர் தருகிறேன்” என்கிறார் .  மகளின் விருப்பத்தைக் கேளாமல் , அப்பாவும் சம்மதிக்கிறார் . 
இந்த நிலையில் , சினிமாவில் ரொம்ப நாள் இருந்தும் சாதிக்க முடியாத ஓர் இயக்குனர் (தம்பி ராமையா )  அந்த ஊருக்கு வருகிறார் . உடன் கேமரா மேன் ஒருவனும் ( கும்கி அஷ்வின்) 
கிராமத்துப் பெண் ஒருத்தியின்  நடை உடை பாவனைகள், போக்கு வரத்து , பழக்க வழக்கம் ஆகியவற்றை அவளுக்கே தெரியாமல் படம் எடுத்து,
viru-2
அதற்கு ஏற்ப மற்ற காட்சிகளை அமைத்து , மற்ற கதாபாத்திரங்களை நடிக்க வைத்து , படம் எடுப்பது அவரது ஐடியா . 
அதே ஊரில் படித்து வேலை  இல்லாமல் இருக்கும் இளைஞன்  சிவாவும் (சஞ்சய்), அவனது நண்பன் தாசும் (முருக தாஸ் ) , தொழில் துவங்குவதற்காக கொடூர கந்து வட்டிக்காரன் ஒருவனிடம் ,
ஆறு லட்சம் பணம் வாங்குகின்றனர் . பணத்தை ஒருவன் திருடி விட்ட நிலையில் கந்து வட்டிக்கார தாதா பணத்தைக் கேட்டு மிரட்டுகிறான். 
அந்த இளைஞர்களை பார்க்கும் இயக்குனர் , ”தன் படத்தில் ஆறு நாள் நடித்தால் ஆறு லட்சம் தருகிறேன்” என்கிறார் . 
இருவரும் சம்மதிக்க, அவர்  ரகசிய கதாநாயகியாக இயக்குனர் முடிவு  செய்வது , தண்ணீருக்கு பணயம் வைக்கப்பட்ட கதாநாயகியை ! 
viru-3
அவளுக்கு தெரியாமலேயே அவளது நடை உடை பாவனைகளை மற்றும் செயல்பாடுகளைப் படம் பிடித்து அதற்கு ஏற்ப ஹீரோவுக்கு காட்சி அமைத்து நடிக்க வைத்து படம் எடுக்கிறார் . 
படம் முடிந்து ஆறு லட்ச ரூபாய்க்கு செக்கும் கொடுக்கிறார் . 
அவர் போன அடுத்த நாள் , இரண்டு ஊர்களின் ஊர்த்தலைவர்கள் மற்றும்ம் அவர்களது ஆட்கள் சிவா வீட்டுக்கு வந்து அவனை அடித்துத் துவைக்கின்றனர் .
காரணம் நந்தினி ஓடிப் போய்  விட்டதுதான் . யூ டியூப்பில் சஞ்சயும் நந்தினியும் நடித்த படம் வெளியாகி இருக்க,  சஞ்சய்தான் நந்தினியை கடத்தி விட்டன என்பது  அவார்களது முடிவு . 
இரண்டு நாட்களுக்குள் நந்தினியை கொண்டு வராவிட்டால் , சிவாவின் அம்மா , அப்பா , தங்கை மூவரையும் உயிரோடு கொளுத்தி விடுவோம்  என்று அனைவரும் சொல்ல, நந்தினியை தேடி நண்பர்கள் கிளம்புகின்றனர் . 
இதற்கிடையே  கந்து வட்டி தாதாவுக்கு தரப்பட்ட ஆறு லட்ச ரூபாய் செக் , போலி செக் என்பதை அறியும் தாதா , பார்த்த இடத்தில் நண்பர்கள் இருவரையும் வெட்டிக் கொல்ல ,
தனது வலதுகரமான சங்கிலியுடன் (யோகி பாபு ) கிளம்புகிறான். 
viru-4
ஒரு வார்த்தை கூட இதுவரை தங்களிடம் பேசாத-  எங்கே போனாள் என்று தெரியாத–  நந்தினியை சிவாவால் கண்டு பிடிக்க முடிந்ததா ? அவன் குடும்பத்தின் கதி என்ன?
நந்தினி எங்கே போனாள் ? என்ன ஆனாள்? என்பதே இந்த விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் . 
இயல்பாக ஆரம்பிக்கிற ஒரு கிராமத்துக் கதை  . ஊருக்குள் டைரக்டர்  வந்த உடன் வித்தியாசமான எல்லைக்குள் நுழைகிறது  திரைக்கதை . 
கதாநாயகி  வழக்கமாக  செய்யும் செயல்பாடுகளை வைத்தே அதற்கு தோதான காட்சிகளை அமைத்து, அவளுக்கு சுத்தமாக தெரியாமல்   
நடிகர்களை நடிக்க வைத்து அவள் நடிப்பது போல காட்சிகளை அமைத்து படமாக எடுக்கும் அந்த உத்திகள் அபாரம் . 
டிக்கட்டில் லவ் லெட்டர் அமைக்கும் காட்சியும் மறுநாள் கோலம் போடும் காட்சியும் அந்த உத்திகளின் உச்சம் . 
viru-5
அதுவும் பச்சை சேலையை கிரீன் மேட் ஆகப் பயன்படுத்தி நந்தினிக்கே தெரியாமல் அவளும் சிவாவும் பேசுவது போல காம்பினேஷன் ஷாட்கள் எடுப்பது  அட்டகாசம் 
சாத்தியத்துக்கான  லாஜிக் பற்றி சில கேள்விகள் எழுந்தாலும் , இந்த  ஏரியாவில் சும்மா பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார், திரைக்கதையாளர் –  இயக்குனர் வின்சென்ட் செல்வா .
ஆசம்! ஆசம்!! அழுத்தமான கை குலுக்கல்கள், சபாஷ் சார் . 
இளையராஜா மற்றும் ஏ ஆர்  ரகுமானின் பாடல்களைப் பயன்படுத்தி காதுக்குள் தேன் ஊற்றுகிறார்கள் 
இரண்டாம் பகுதியில் படம் பாதுகாப்பான காமெடி என்ற ஏரியாவில் நுழைகிறது . 
நிறைய நட்சத்திரங்கள் மிதமான காமெடி என்று படம் நகர்கிறது . 
மனோபாலா தம்பதியின் பீரோவுக்குள் முருகதாஸ் சிக்கிக் கொள்வது லக லகக் கலகல !
நியாயமான கந்து வட்டி தாதா குணாதிசயம் கவனிக்க வைக்கிறது . 
viru-6
முக நூலில் காதல் என்று சொல்லும் இளைஞர்களை நம்பி ஓடி வந்து ஏமாறும் பெண்களுக்கு நல்ல பாடமும் சொல்லும் வகையில் மரியாதையை பெறுகிறது படம். 
காதலின் தகுதி சொல்லும் கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி . 
சஞ்சய்  இயல்பாக நடிக்கிறார் . அருந்ததி நாயர் முதிர் அழகியாக தெரிகிறார் . தம்பி ராமையா நடிப்பில் அசத்துகிறார் .முருகதாஸ் சிரிக்க வைக்கிறார் .
மயில்சாமி, மனோ பாலா,  ரோபோ ஷங்கர் ,  டி பி கஜேந்திரன் ஆகியோர் ஆங்காங்கே லேசாக புன்னகைக்க வைக்கிறார்கள் 
ரஜின் மகதேவின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது . 
இரண்டாம் பகுதியில் நிறைய கேரக்டர்கள் இருந்தும் பல கேரக்டர்கள் வீணே திரிவதை  தவிர்த்து இருக்கலாம் . 
1980 களில் வரும் படங்களை நினைவூட்டும் படமாக்கல்  அழகு என்றாலும் இன்றைய  வெகுஜன ரசனைப் பாணியில் ஒரு பின்னடைவே . 
viru-7
மேக்கிங்கில் சமகால பாணியை பின்பற்றி , நந்தினியை அவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கவில்லை என்பது போல கதை அமைத்து அதை சீரியஸ் ஆக்கி ,
அதில் பேஸ்புக் காதலனை நம்பி இளம்பெண்கள் ஓடுவதன் விபரீதம்  சொல்லி, 
இரண்டாம் பகுதியில் இன்னும் வித்தியாசமான ஃபிரெஷ்ஷான காமெடி காட்சிகளை அமைத்து இருந்தால் இந்தப் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும் 
ஆனாலும் என்ன … 

இந்த  வாரம் வெளியான ஐந்து படங்களிலும் கொஞ்சமாவது சுவாரஸ்யமான படம் என்றால் அது இந்தப் படம்தான் . 

மொத்தத்தில் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ….   விஷயம்  இருக்கு; இன்னும் விசேஷமாக இருந்திருக்கலாம்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *