கிங் ஆஃப் கொத்தா @ விமர்சனம்

வே ஃபேரர் ஃபிலிம்ஸ் சார்பில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஸீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான், பிரசன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி , ஷபீர் கல்லரக்கல், நைலா உஷா, கோகுல் சுரேஷ்  நடிப்பில் அபிலாஷ் சந்திரன் எழுத்தில் அபிலாஷ் ஜோஷி இயக்கி இருக்கும் படம் 

கொத்தா என்ற ஊரில் நண்பர்களாக இருந்து பின்னர் பகைவர்கள் ஆன இரண்டு பேரின் சண்டையும் முடிவுமே படம். 

இதற்குள் காதல்,  நட்பு , பாசம்,  துரோகம் , சுயநலம் என்று காற்றில் கத்தி வீசுவது போல என்னமோ எழுதி எடுத்து நடித்து சாவடிக்கிரர்கள் 

துல்கர் , பிரசன்னா இவர்களின் நடிப்பு, நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, உமா சங்கரின் படத் தொகுப்பு , கலை இயக்கம், படத்துக்கான டோன் தவிர மற்றது எல்லாம் கலகலத்துப் போயிருக்கிறது . ரப்பிஷ் 

படம் எடுத்த எல்லோரும் இப்பப் போய்  எதற்கு ஷோலே, நாயகன் , தளபதி எல்லாம் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. 

வில்லனின் காதலியாக வருபவளை வேண்டும் என்றே வன்மத்தோடு  மூக்குத்தி போட்ட தமிழ்ப் பெண்ணாகக் காட்டி அவள் முகத்துக்கு முன்னால்” நீ ஒரு அவுசாரி” என்று சொல்வதில்  பெருமைப்பட்டு இருக்கிறார்  துல்கர் .(துல்கரின் அப்பா முதலில் தமிழில் நடித்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கை தூக்கிக் கும்பிட்டு என் தாய் மொழியின் தாய் மொழிக்கு வந்திருக்கிறேன் என்றார். .)

இதற்குப் பதில் நல்ல திரைக்கதைக்கு முயன்று இருக்கலாம்  அதை விட்டு அபிலாஷ் சந்திரனும்  அபிலாஷ் ஜோஷியும் தங்கள் அபிலாஷைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள ஒரு படம் எடுத்து இருக்கிறார்கள்

அதே போல ஒரு படத்தை இன்னொரு மொழியில் மொழி மாற்றம் செய்யும்போது அந்த மக்களுக்குப் புரியும் பெயரை வைக்க வேண்டும் . அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் புரியுதோ இல்லியோ  என் மொழியில் வைத்த பெயரை அப்படியே வைப்பேன். எனக்காக எப்படி இருந்தாலும் பார்ப்பார்கள் என்பது அலட்சியம் கூட இல்லை . ஆணவம் 

படம் வேறு மூன்று மணி நேரம்  ஓடி சாவடிக்கிறதா .. வெளியே வருபவர்கள் கிங் ஆஃப் கொத்தா என்பதில்

 ‘கொத்தா’ என்ற வார்த்தையின் முதல் எழுத்தை நெடில் ஆக்கி அதற்கு முன்பு ங் என்ற எழுத்தைப் போட்டு , 

மொத்தமாகப் படத்தின் பேரைச் சொல்கிறார்கள். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *