பிருத்வி ராஜன் சாந்தினி நடிப்பில் ‘காதல் முன்னேற்றக் கழகம்’ .

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்றக் கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார்.

நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, 

அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு –  ஹாரிஸ் கிருஷ்ணன்

இசை   –  பி.சி.சிவன்

பாடல்கள் –   யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா

எடிட்டிங்  –    சுரேஷ் அர்ஸ்

நடனம்   –    அசோக்ராஜா

சண்டை பயிற்சி   –    அம்ரீன் பக்கர்

கலை  –    பிரகதீஸ்வரன்

தயாரிப்பு நிர்வாகம்   –    முத்தையா,விஜயகுமார்.

தயாரிப்பு –   மலர்க்கொடி முருகன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  மாணிக் சத்யா

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் கதிரேசன், தேனப்பன், இயக்குனர்கள் பாண்டியராஜன் , பாலாஜி தரணிதரன் ,

நடிகர் ஆரி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் 

படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது,  “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை.  கதா நாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.

அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று, 

வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்..

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது… அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம்.

யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.

படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் , 15 மிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.

சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார்.

நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம்.

படப்பிடிப்பு  சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம்,  திட்டக்குடி,  விருத்தாசலம், 

பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது” என்றார். இயக்குனர் மாணிக் சத்யா.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *