கூகுள் குட்டப்பா @ விமர்சனம்

இயக்குனர் கேஸ் ரவிகுமார் தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்க, லாஸ்லியா , தர்ஷன், யோகி பாபு நடிப்பில் சபரி  – சரவணன் இரட்டையர் இயக்கி இருக்கும் படம். 

மலையாளத்தில் வந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் மறு உருவாக்கம். 

மனைவியை இழந்து விட்ட நிலையில் மகனுக்காகவே (தர்ஷன்) வாழ்கிறார் கிராமத்துப் பெரிய மனிதர் ஒருவர் (கே எஸ் ரவிகுமார்) . ஆனால் அந்த மகனோ மெக்கட்ரானிக்ஸ் படித்து விட்ட நிலையில் ஜெர்மன் போய் பணியாற்ற முடிவு செய்கிறான் . அப்பாவின் விருப்பத்தை மீறி செல்லும் அவன் , அப்பாவுக்குத் துணையாக – உதவியாளாராக ஒரு மனித ரோபோவை விட்டு விட்டுப் போகிறான். அந்த ரோபோவின் இயந்திரத்தனமான உதவிகள் மற்றும் துணையை பாசமாக உணர்கிறது பெரியவரின் வெள்ளந்தி மனசு. ஒரு நிலையில் அதை மகனே வெறுக்க, இன்னொரு பக்கம் மீண்டும் அந்த ரோபோவை ஜெர்மனிக்கே கொண்டு போக வேண்டிய கட்டாயம் வர மற்றொரு பக்கம் அந்த ரோபோ தான் தாக்கப்பட்டால் தாக்கியவரை கொன்று விடும் என்பது தெரிய வர நடந்தது என்ன என்பதே இந்த கூகுள் குட்டப்பன். 

பெரிதாகப் பாராட்டவோ பெரிதாக குறை சொல்லவோ வாய்ப்பில்லாத படம் . 

ரவிக்குமாருக்கு அந்த கேரக்டர் பொருந்திப் போகிறது . லொக்கேஷன்கள் அருமை யோகி பாபு காமெடிக்கு முயற்சி செய்து இருக்கிறார் . சிறுவன் பாவையர் சிறப்பாக நடித்து இருக்கிறார் . ரோபோ வடிவம், குரல் சிறப்பு 

ரோபோ மனிதத்தனமாக நடித்து இருக்க மற்ற எல்லோரும் ரோபோ மாதிரி படத்தில் வருகிறார்கள் போகிறார்கள் . 

ரோபோவும் பெரியவரும் நெருக்கமாகி விட்ட பிறகு , தன்னைத் தாக்குவோரை ரோபோ  கொல்லும் என்று சொல்லி இன்டர்வல் விடுவதில் என்ன சுவாரஸ்யம்?பெரியவரின் முதியோர் காதல் பகுதி படத்தின் அப்போதைய நீளத்துக்கு உதவுகிறதே தவிர அதனால் படத்தின் முழுமைக்கு என்ன பலன்? தவிர ஏன் அப்படி ஒரு விட்டேத்தியான மேக்கிங் ?

பிராங்க் ஸ்டர் கேரக்டரில் ஏன் அவ்வளவு குழப்பம்? நாடகத்தனம்?

திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *