அனூப் காலித் தயாரிப்பில் பரத் , அனூப் காலித், விவியா சந்த், அதில் இப்ராஹிம் , அனு மோகன் நடிப்பில் சுனிஷ் குமார் இயக்கி இருக்கும் படம்.
மூன்று ஆண்கள் (அனூப் காலித், அதில் இப்ராஹிம் , அனு மோகன்) ஒரு பெண் (விவியா சந்த்) அடங்கிய ஒரு குழு ஒரு கண் பார்வை இல்லாத உடல் வலுவான பணக்கார நபர் ( பரத் ) வாழும் வீட்டில் கொள்ளை அடிக்கப் போகிறது . அது கொலைகளிலும் முடிகிறது . நடந்தது என்ன என்பதே படம் .
மிகக் குறைவான நடிகர்கள் , ஒரு வீடு இவையே படத்தின் பெரும்பகுதி நேரத்தை ஆக்கிரமிக்கும்படி எழுதப்பட்ட திரைக்கதை.
அதே நேரம் கைலாஸ் மேனனின் இனிய இசையில் அழகழகான லொக்கேஷன்களில் எடுக்க்கப்பட்ட ஒரு பாடலும் உண்டு.
கண் தெரியாத ஜிம் பாடி நபரின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் பரத். மற்றவர்களும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர் .
வீட்டில் நடக்கும் சில காட்சிகள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கின்றன .
சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவும் தினேஷ் காசியின் சண்டை அமைப்பும் அசத்துகின்றன.
துப்பாக்கி முனையில் பண லாக்கர் முன்பு நிறுத்தி ”லாக்கரைத் திற” என்று சொல்பவனிடம் ”உனக்கு என்ன வேணும் ?” என்று கேட்கிறார் பரத் . ”ரெண்டு இட்லி மெது வடையோடு கெட்டிச் சட்னி” என்ற பதிலை எதிர்பார்த்தாரோ என்னவோ ?கிளைமாக்ஸ் சமயத்தில் வரும் எதிர்பாராத டுவிஸ்ட்டும் காரண காரியத்தோடு வரும் அந்த பிளாஷ்பேக்கும் நேர்த்தி.
இன்னும் சிறப்பான திரைக்கதை வசனம் அமைத்து இருக்கலாம்.
கம்மி நடிகர்களோடு கம்மி செலவில் கம்மி லோக்கேஷன்களில் படம் எடுக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்ததால் எல்லாமே கம்மி ஆகிவிட்டது.