மனைவியின் நினைவாக ஓர் இசை ஆல்பம்!

மனைவியின் மீது இருக்கும் அன்பை பல விதத்தில் வெளிப்படுத்தும் கணவர்கள் மத்தியில்,  தனது மனைவிக்காகவும்,

அவரை நினைத்து வருந்தும் குழந்தைகளுக்காகவும் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்  டி.மகேந்திரன் என்பவர் . 

சினிமா மீது ஆர்வம் கொண்ட டி.மகேந்திரன், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் முயற்சித்து

பிறகு குடும்பம், குழந்தைகள் என்று இல்லற வாழ்வில் சந்தோஷமாக இருக்க,

சமீபத்தில் அவரது மனைவி விபத்து ஒன்றில் எதிர்பாரதவிதமாக உயிரிழந்துவிட்டார்.

அவரது இறப்பை தாங்கிக்கொள்ளாத அவரது குழந்தைகள் பெரும் சோகத்தில் இருக்க,

டி.மகேந்திரனும் தனது மனைவியின் பிரிவால் பெரும் துன்பத்துக்கு ஆளானதோடு, பிள்ளைகளின் சோகத்தை பார்த்து சோர்ந்து போனவர்,

தனது குழந்தைகளுக்காகவும், மனைவின் பிரிவின் சோகத்தை வெளிப்படுத்தும் விதமாகவும்,

மனைவியின் பெயரான ‘லிங்கம்’ என்ற தலைப்பில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பு தனது மனைவியை காதலித்தது குறித்து ஒரு பாடல்,

திருமணம் நடைபெற்ற பிறகு கணவன் – மனைவி அன்பை  வெளிப்படுத்தும் ஒரு பாடல்,

அம்மாவை பிரிந்து வாடும் மகளின் கண்ணீர் பாடல் மற்றும் ஆட்டம் போட வைக்கும் ஒரு குத்து பாடல் என்று,

இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு பாடல்களும் தற்போது யூடியூபில் இருக்கின்றன. 

‘லிங்கம்’ ஆல்பத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களையும் எழுதியிருக்கும் டி.மகேந்திரன்,

ஒரு பாடலில் அவரது மகள் தமிழச்சியை நடிக்க வைத்திருக்கிறார். மேலும், ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் குத்து பாடலில்

இயக்குநர் ராஜா தேசிங்கு நடித்திருக்கிறார். இவர் ’நட்பின் 100ம் நாள்’, ‘மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர்களுடன் வடிவேல் கணேஷ், தமிழரசன், சுருளி, விஷ்வா, நந்தினி, மதினா, மலர்விழி, பிரவின்குமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

வாசுதேவன் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்திற்கு முராள் இசையமைத்திருக்கிறார்.

இவர் விஜய் ஆண்டனியிடம் பல படங்களில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியிருப்பதோடு, பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராம் முருகன் நடனம் அமைக்க, இ.சுரேஷ் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். முராள், ராஜா, ஷாலு, செளமியா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.  

’லிங்கம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் கில்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்துக்கொண்டு ஆல்பத்தை வெளியிட்டார்.

தமிழச்சி ஸ்டுடியோஸ் சார்பில் டி.மகேந்திரன் தயாரித்து பாடல் எழுதியிருக்கும் ’லிங்கம்’ ஆல்பத்தின் பாடல்களை பார்க்கவும், கேட்கவும் கீழே உள்ள லிங்குகளை க்ளிக் செய்யவும்.


https://youtu.be/KmDMyhOMJ2o
https://youtu.be/BKRmc53Y3Ts
https://youtu.be/a9dCkGIOSWA
https://youtu.be/Q53M5Y__noY

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *