கிளாப் இன் சினிமாஸ் சார்பில் செந்தில் கண்டியார் தயாரிக்க, சாயா சிங், தம்பி ராமையா பேபி பாத்திமா, ஜெயப்பிரகாஷ் நடிப்பில் விஷ்ணு ராம கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம்.
பாலியல் பெண் தொழிலாளி ஒருவரின் (சாயா சிங்) மகளான சிறுமிக்கு ( பேபி பாத்திமா) எலும்பு மஜ்ஜை நோய்க்கு ஆளாக, அதற்கு சிகிச்சை அளிக்க, அந்தக் குழந்தையின் தந்தையின் உடல் திசுக்கள் மருத்துவ ரீதியாகத் தேவைப்படுகிறது .
ஒரு வயதான காவல் அதிகாரி (தம்பி ராமையா) , அமைச்சர் ஒருவரின் (ஜெயப்பிரகாஷ்) மகன் (மைக்கேல்) இருவரில் ஒருவருக்குத்தான் அந்த குழந்தை உருவாகி இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள் பாலியல் தொழிலாளி .
மகளைக் காப்பாற்ற அவர்களை அணுக, நடந்தது என்ன என்பதே படம்.
கவனம் கவரும் வித்தியாசமான சுவாரசியமான கதை .
அட்டகாசமான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார் சாயாசிங் .

வழக்கம் போல நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் தம்பி ராமையா
சிவதர்ஷன் ஒளிப்பதிவும் சிறப்பு .
ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார்கள் . பொருத்தமான அழுத்தமுள்ள திரைக்கதை அமைத்து இருந்தால் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும் .
சேரனின் பின்னணி இசையில் வசனம் தெளிவாகப் புரியவில்லை புரியவில்லை . சாயாசிங்கின் பின்னணிக் குரலும் சரி இல்லை
வித்தியாசமான கதை விரும்பிகளை படம் கவரும்