க்ராக்பிரைன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ் நடிப்பில் சந்துரு மணிவாசகம் எழுதி இருக்கும் படம்.
கோவைப் பகுதியில் பெண்கள் காணமல் போகிறார்கள். கடத்தப்பட்டு கொலையும் செய்யப்படுகிறார்கள்.
விசாரிக்கக் களம் இறங்குகிறது போலீஸ் .
கணவன் மனைவி என்ற நிலையில் இருந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டுக் காத்திருக்கும் ஒரு தம்பதி விசாரணை செய்கிறது .
கொலை செய்தவர் யார் கொலைக்கான காரணம் என்ற விசாரணையில் ஓர் எதிர்பாராத திருப்பம்.
ஒரு பால் பாலினக் கவர்ச்சி , அதன் மூலம் வரும் ஒரு பால் சேர்க்கை என்பது இயல்பான ஒன்று . அரசே அதை அங்கீகரித்து விட்டது .
ஆனால் அதை குற்றமாக , அவமானகரமான செயலாகக் கருதி சம்மந்தப்பட்டவர்களை மரியாதை இன்றி நடத்துவது தப்பு என்பதை கோபமாகச் சொல்லி படம் முடிகிறது .
நியாயம்தான்.
ஆனால் படிக்கும் போது, எப்படி காமம் தப்போ அது போல ஒரு பால் சேர்க்கை அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் இவையும் தவறுதானே. அந்த வகையிலும் இயக்குனர் யோசித்து இருக்கலாம்.
இன்னும் சிறப்பான திரைக்கதை , பொருத்தமான காட்சிகள் எல்லாம் தேவைப்படும் படம். தொழில் நுட்ப ரீதியாகவும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
