எட்சட்ரா என்டர்டைன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்க, ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீகாந்த், மானஸ்வி , கவுரவத் தோற்றத்தில் சிலம்பரசன் நடிக்க ஜமீல் இயக்கி இருக்கும் படம்.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரன் ஒருவனுக்கும் அவனிடம் இருந்து தனது மகளையும் (மானஸ்வி) மற்ற சிறுமிகளையும் மீட்க ரத்தக்களறியோடு போராடும் ஒரு கணவனை ( சிலம்பரசன்) இழந்த பெண்ணுக்குமான (ஹன்சிகா) போராட்டமே படம் .
சிம்பு கவுரவத் தோற்றத்தில் கெத்துக் காட்டுகிறார் . ஆனால் படத்துக்கு அதனால் சத்து எதுவும் இல்லை .
ஹன்சிகாவுக்கும் கெத்தான சீன்கள் வைக்க வேண்டும் என்று எண்ணி அர்த்தமில்லாத இடைவேளை டுவிஸ்ட் வைத்து படத்தில் வித்திலேயே வெந்நீர் ஊற்றுகிறார்கள்.
ஹன்சிகா அன்னியமாக இருக்கிறார் . மதியின் ஒளிப்பதிவு, ஜிப்ரானின் இசை ஓகே .
