இளையராஜா இசையில் ஸ்ரேயா நடிக்கும் ‘மியூசிக் ஸ்கூல்’

ஹைதராபாத்தைச் சேர்ந்த  யாமினி பிலிம்ஸ் தயாரிப்பில் ,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023  அன்று தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில்  வெளியாகிறது. 
 
இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கல்விச் சாதனைகள் மட்டுமே முக்கியமில்லை,  கல்வியல்லாத  மற்ற செயல்பாடுகளும் என்பதை  வலியுறுத்தும் இத்திரைப்படம்,  பொழுதுபோக்கு முறையில் இசைஞானியின் இசைக்கோர்ப்பில், 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது.  அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில்,   கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது. 
 
படம் வெளியாவதையொட்டி, படக்குழு தீவிரமாக முன்வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று இயக்குநர் இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். அவருடன்  உரையாடி, புகைப்படங்கள் எடுத்துகொண்டனர். இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி  ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து  நடித்துள்ளனர். 
 
 இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. பிவிஆர் இந்தி, தமிழ்ப் பதிப்புகளையும், தில் ராஜு தெலுங்கு பதிப்பையும் வெளியிடுகிறார்கள் . 
 
இப்படம் உலகமெங்கும் 12 மே 2023 அன்று வெளியாகிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *