கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் இரட்டை வேடத்தில் பல கெட்டப்களில் நடிக்க செல்வராகவன் இயக்கி இருக்கும் படம் நானே வருவேன்.
படத்தில் இந்துஜா, யோகி பாபு, எல்லி அவ்ரம் என்ற ஸ்வீடன் நடிகை ஆகியோர் நடித்துள்ளனர் .
யுவன் சங்கர் ராஜா இசையில் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாக்கு இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது
தனுஷ் இளைஞன் , முதியவர் என்று இரட்டை வேடத்தில் பல கெட்டப்களில் தோன்றுகிறார். டீசருக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்து இருக்கும் இசையே சிறப்பாக உள்ளது.
வல்லவன் ஒருவன் படத்தில் வேதா இசையில் கண்ணதாசன் எழுதிய பளிங்கினால் ஒரு மாளிகை பவழத்தால் மணி மண்டபம் பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
டீசர் பார்க்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்
