திகில் மர்மம் நிறைந்த ‘நோக்க நோக்க’

ஆர் புரடக்சன்ஸ் மற்றும் ஏ வி பி சினிமாஸ் சார்பில் ஆர் முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கி உள்ள படம் நோக்க நோக்க . 

தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம், தெலுங்கில் ஸ்ரீ ராமுடு, கன்னடத்தில் ஃபிரெண்ட்லி பேபி, சாக்லேட் பாய் ஆகிய படங்களை இயக்கியவர் முத்துக் குமார் .

தொலைக்காட்சி ஊடகத்தில் பணி புரியும்  நிருபர் பிரதிமா இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில் நடந்த சட்டவிரோதமான பண மாற்றிதலை ஆவணமாக்கி , ஒளிபரப்புக்கு செலுத்தும் நேரத்தில் கொலை செய்யப்படுகிறாள். அவரது ஒரே மகளும் கொல்லப்படுகிறாள். நாயகியின் பெண் குழந்தை பேயாக வந்து எப்படி குற்றவாளிகளைப் பழிவாங்குகிறாள்; கடவுள் அவளுக்கு எப்படடி உதவுகிறார்  என்பதுதான் படம். 

இணையத்தில் கந்த சஷ்டிக் கவசத்தை தவறாக சித்தரித்தவர்களை கடவுள் பழிவாங்குவது போன்ற காட்சிகளும் உண்டு. 

UA சான்றிதழ் பெற்று அடுத்த மாதம் திரைக்கு வரும் இந்தப் படத்தில் புது முகம் அர்ஜுன் நாயகனாகவும்  புது முகம் ஜோதி ராய் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர் .

அர்ஜுன் ராய் பான் மொழிப் படம் ஒன்றிலும் நடிக்கிறார்,  ஜோதி ராய் முன்பு யூ டியூபில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக  இருந்தவர். இவர்களோடு படத்தில் கஞ்சா கருப்பு, ஜாக்குவார் தங்கம், பாவனா, சிந்தியா, மணிமேகலை, சுரேஷ் , அபி, பேபி அமுல்யா பேபி ஜனா ஆகியோர் நடித்துள்ளனர் . 

கதை – பத்மினி, வசனம் – சிவசு, ஒளிப்பதிவு- விஜய் முத்துசாமி, இசை- ஆல்ட்ரின், எடிட்டிங்- அரவிந்த் , இணை- தயாரிப்பு – வெங்கட்ராமன், PRO கணேஷ் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *