ஒரு மெல்லிய கோடு @ விமர்சனம்

melliya 1

பல வியாபார நிறுவனங்களின் உரிமையாளரும் பெரும் பணக்கரியுமான பேரிளம் பெண் மாயா (மனிஷா கொய்ராலா),

தன்னை விட வயது குறைந்த அக்ஷய் என்ற மருந்து ஆராய்ச்சியாளன் (ஷாம்) மீது ஆசைப்பட்டு காதலித்து மணந்து கொள்கிறாள் .

அதீதமான அவளது ஆளுமை குணமும் பணிகளுக்கும் அப்பாற்பட்டும்  பொழுது போக்குகளில் அவள் காட்டும் ஆர்வமும், 
அவனுக்கு அவள் மீது எரிச்சலை அதிகப்படுத்துகிறது .  குடி கும்மாளம் என்று  எல்லாம் கிடைத்தும் ஒரு நிலையில் மாயா மீது அக்ஷய்க்கு  வெறுப்பு மண்டுகிறது. 
இந்த நிலையில் பூமிகா என்ற இளம்பெண்ணை (அக்ஷா பட்) சந்திக்கிறான் அக்ஷய் . அவளை காதலிக்கிறான் .அவளும் சம்மதிக்கிறாள் .
melliya 8888
ஆனால் தான் திருமணம் ஆனவன் என்று சொல்லும்போது,   அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவனைப் பிரிகிறாள் . 
அவளைத் தேடித் போகும்போது ”உனக்கு அவள் வேண்டுமா? நான் உனக்கு வேண்டுமா?” என்கிறாள் . 
அதி புத்திசாலியான மாயாவுக்கு அக்ஷயின் வெறுப்பு புரிகிறது . தன் தரப்புக்கென சில வேலைகளை செய்கிறாள் 
இது அக்ஷய்க்கும் புரிய வர , அக்ஷய் , பூமிகா  இருவரும் திட்டமிட்டு  மாயாவை மருத்துவ விஞ்ஞான முறைப்படி கொலை செய்கிறார்கள் . 
பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை வந்த மாயாவின் உடல்,  மார்ச்சுவரியில் இருந்து காணமல் போகிறது 
 
மாயாவின் மரணத்துக்கான விசாரணை அதிகாரியாக வருகிறார் ஷக்தி வேல் (அர்ஜுன்).  கால்கள் பாதிக்கப்பட்ட தன் காதல் மனைவி சந்தியாவை (நேஹா சக்சேனா ) ஒரு விபத்தில்  இழந்தவர் அவர் . 
Actor Arjun Sarja in Oru Melliya Kodu Movie Latest Stills
சக்தி வேலின் விசாரணையோடு படம் வளர்கையில் இறுதியில் முற்றிலும் வேறு மாதிரியான முடிவுக்குள் படம் போகிறது . 
இயக்குனர் ரா. பார்த்திபனின் குரலில் சமூக அக்கறையோடு கூடிய ஒரு நல்ல எச்சரிக்கை படத்தில் விடப்படுகிறது . 
இதுதான் ஒரு மெல்லிய கோடு.
AMR’s Game  என்ற பெயரில்  பிப்ரவரி 26 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படத்தின்  மொழி மாற்று வடிவமே இந்தப் படம் .
(ஆனால் மிக சிறப்பாக உதட்டசவை ஒத்திசைவு செய்து   மொழி மாற்றுப் பின்னணி வசனங்களை பேசி இருக்கிறார்கள் . படத்தில் விரவிக் கிடக்கும் ஆங்கிலமும் அதற்கு வசதியாக இருக்கிறது )
2012  ஆம் ஆண்டு வெளிவந்த El Cuerpo  ( THE BODY என்று பொருள்) என்கிற ஸ்பானிஷ் படமே இந்தப் படத்துக்கு  மூலம் .
Shaam, Manisha Koirala in Oru Melliya Kodu Movie Images
அதே தினத்தில் மலையாளத்தில் வெளிவந்த வேட்டா என்ற படமும் மேற்படி El Cuerpo படத்தின் லவட்டலே . 
 
படத்தில் சற்று முதிர்ந்த  போலீஸ் அதிகாரியாக தனக்கே உரிய பாணியில் அர்ஜுன் மஸ்து காட்டுகிறார் .
(எத்தனையோ படங்களில் எத்தனையோ முறை அம்மா, அப்பா , அண்ணன் , தம்பி, மனைவி , குழந்தை , நண்பன் ஆகியோர் பிணமாகக் கிடக்கும் காட்சியில் நின்றும்…..
இன்னும் கூட அர்ஜுனுக்கு அழுகைக் காட்சியில் நடிக்க வரலியே .. இறைவா !)
 
அர்ஜுனையும் தாண்டி   படம் முழுக்க ஆக்கிரமித்து இருப்பவர் ஷாம்தான் . 
இளம் ஆராய்ச்சியாளனாக , வயதில் பெரிய பெண்ணின் முரட்டுக் காதலுக்கு ஆட்படுபவராக , அவர் செய்யும் அடாவடிகளை ரசிக்க முடியாமல் தவிப்பவராக, கல்லூரிப் பெண்ணைப் பார்த்து காதல் வயப்படுபவராக  , 
 காதலியுடன் வாழ்வதற்காக மனைவிக்கு விஷம் கலந்து கொடுத்து விட்டு ஒரு துளி கண்ணீர் விடும் கொஞ்ச மனசாட்சிக் கணவனாக,
melliya 888
கடைசியில் செய்த தவறை விடவும் அதிக தண்டனைக்கு ஆளாகும் துரதிர்ஷ்டசாலியாக ….படம் முழுக்க ‘ஷாம்’ராஜ்யம்தான்.  
என்ன … இவரும் இன்னும் கொஞ்சம் கேரக்டரை உணர்ந்து மேலும் சிறப்பாக நடித்து இருக்கலாம் . 
வாவ் மனிஷா கொய்ராலா ….!
கொடிய கேன்சரில் இருந்து மீண்டு வந்த மனுஷியா இவர் ? வயதும் வந்து போன நோயும் முகத்திலும் உடலிலும் முதுமைக் கோடுகளை அதிகம் வரைந்து விட்டு இருந்தாலும்,
 அந்த ஸ்டைல் என்ன? நடிப்பு என்ன ? அலட்டல் என்ன ? ஷார்ப்னஸ் என்ன ?  மானசீகக் கைதட்டல்கள் மனிஷாவுக்கு .
HEARTY WELCOME FOR YOUR ROYAL COME BACK,  DEAR MANISHA !
ஒரு பாடல் காட்சியில் சூடேற்றுகிறார் அக்ஷா பட்.
Asha Bhat, Shaam in Oru Melliya Kodu Tamil Movie Stills
இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய சத்து டானிக் . ஒரு பாடலுக்கு பா. விஜய் எழுதி இருக்கும் ”ஒரு மெல்லிய கோடு…”  என்ற பல்லவி முதல் வரியே,  படத்துக்குப் பெயராகவும் ஆகி இருக்கிறது 
சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்த்துக்கு பெரும் பலம் . குறிப்பாக ஒளிப் பயன்பாடு அட்டகாசம் !  ஆடை வடிவமைப்பும் நைஸ் நைஸ் . 
ஆனால் ஸ்கிரிப்ட்தான் , சிக்கலில் விக்கிக் கொண்டு நிற்கிறது 
என்னதான் ஆங்கிலப் படத்தின் உல்ட்டா என்றாலும் மனைவி மீது வெறுப்பு , இன்னொரு பெண்  மீது காதல், மனைவியைக் கொலை செய்வது எல்லாம் நமக்கு  அரதப் பழசான கதை . 
கடைசியில் வரும் அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் சமூக அவசியமான ஒன்று என்றாலும்,  அதை செய்யும நபர் யார் என்பதும அதற்கு அவர் சொல்லும் காரணமும் அவர் அளவில் நியாயமாக இருக்கலாம் .
ஆனால் பொதுவில் அதில் நியாயம் இல்லை .  தவிர, மகள் மூலமே அதை அவர் செய்யும் முறையும் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது . 
melliya 999
இவ்வளவு திட்டம போட்டு மனைவியைக் கொல்லும் கணவனுக்கு,   போலீஸ் முன் சோகத்தில் இருப்பது போல நடிக்கக் கூடவா தெரியாது இயக்குனர்  ரமேஷ்? .
அக்ஷய் அழகாக டிரெஸ் போட்டுக் கொண்டு ஸ்டைலாக தம்மடித்துக் கொண்டு போலீஸ் முன் நான்  சீக்கிரம் வீட்டுக்கு போகணும்  . உச்சா வருது என்ற ரீதியில் பேசிக் கொண்டு இருப்பாராம் .
அதை வைத்து அர்ஜுன் அவர் மீது சந்தேகப்படுவராம் . 
அட,  ஷெர்லக் ஹோம்சுக்கு சித்தப்புகளா ஆ ஆ ஆ  … ! சித்தப்புகளா !!
டாய்லெட்டில் கிழித்துப் போட்ட பேப்பரின் அக்ஷய் எடுத்து திங்கும் காட்சி உவ்வே .உவ்வே ஏஏஏஏ…..!
கடைசியில்   அக்ஷய்க்கும் மாயாவுக்கும் ஒரே தண்டனை என்பது நியாயம் இல்லை . 
படத்தைப் பார்க்கும் ஒரு வெகு ஜன ரசிகனுக்கு , 
மாயா மார்ச்சுவரி வரும் முன்பே முழுக்க முழுக்க செத்து விட்டாளா? எனில் அவள் அக்ஷய் முன்னால் உருவமாக வந்து நிற்பது எப்படி ?
melliya 6
அவளை கிருஷ்ண பிரசாத் மார்ச்சுவரியில் காப்பாற்றுவது உண்மை என்றால் அப்புறம் அவளை கொன்றது யார்? எப்போது செத்தாள்? 
என்று பல கேள்விகள் எழ வாய்ப்பு உள்ளது . 
அவற்றை எல்லோருக்கும் புரியும் வகையில் இன்னும் விளக்கமாக  சொல்லி இருக்கலாம் . அட வசனத்திலாவது சொல்லி இருக்கலாம் என்றால்  சொல்ல முடியாமல் போனதற்கு காரணம் மாற்று மொழி உதட்டசைவு!
சலங்கை ஒலி , பிரதிகட்னா, மயூரி எல்லாம்,  இங்கே டப்பிங் படம் என்று தண்டோரா போட்டு சொல்லியும் பிச்சுகிட்டு ஒடுச்சே கண்ணுகளா !
தமிழ் ரசிகன் பொதுவில் செட்டியார் முறுக்கா என்று பார்ப்பது இல்லை . சரக்கு முறுக்கா என்றுதான் பார்ப்பான் . 
சரக்கு முறுக்கா இருந்தா போதும் …
முறுக்கே சரக்கா இருந்தா கூட , 
Shaam, Manisha Koirala in Oru Melliya Kodu New Images
சைட் டிஷ்ஷா  மட்டும் இல்ல மெயின் டிஷ்ஷாவே  மெயின்டைன் பண்ணிக்குவான்  . விஷயம் அம்புட்டுதேங் !
ஆக, 
ஒரு மெல்லிய கோடு… ரொம்ப ரொம்ப மெலிசு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *