பைசா @ விமர்சனம்

Sriram, Aara in Paisa Tamil Movie Images

தாதாக்களை தனது கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு பல கிரிமினல் செயல்களில் ஈடுபடும் தொழிலதிபர் ஒருவர் , 

அமெரிக்க டாலரும் இந்திய ரூபாயுமாய்  நூறு கோடி ரூபாய் பணத்தை,
போலீஸ் ரெய்டுக்கு  பயந்து ஒரு வாட்டர் புரூஃப்  பண்டலாகக் கட்டி , 
சென்னை  அசோக் நகர் பக்கம் காசி தியேட்டர் அருகில் உள்ள சாக்கடை ஓடும் அடையாறில் மூழ்கடித்துப் பதுக்கி வைக்கிறார். 
அந்தப் பகுதியில் குப்பை  பொறுக்கி வாழும் சிறுவர்களில் ஒருவன் (பசங்க ஸ்ரீராம்) கையில்  அந்த நூறு கோடி ரூபாய் பண பண்டல் கிடைக்கிறது . 
டிபார்ட் மெண்டல் ஸ்டோரில் வேலை செய்யும் ஒரு சிறுமியுடனான  ( ஆரா ) அவனது காதல் , நண்பர்களுடனான அவனது இயல்பான வாழ்க்கை…. இவை எல்லாம் அந்த பணம் வந்த பிறகு கெடுகிறது . 
paisa 2
ஒரு நிலையில் தொழில்  அதிபர்  பணத்தை  மேலே எடுக்கத் திட்டமிட, அப்போதுதான் பணம் காணமல் போனது தெரிகிறது . 
தொழிலதிபரின் அடியாட்கள் கும்பல் ஒரு வழியாக போராடி , பணத்தை திருடிய அந்தப் பையனைக்  கண்டு பிடிக்கிறார்கள் . 
நண்பர்கள் , காதலி எல்லாம் பிரிந்த நிலையில் , அவனைக் கொன்று  அந்தப் பணத்தை அபகரிக்க  அடியாட்கள் முயல,  அப்புறம் என்ன என்பதே இந்தப்  படம் . 
நாயகனாக நடித்து இருக்கும் ஸ்ரீராம் கஷ்டப்பட்டு நடிக்கிறார் .
நாயகியாக நடித்து இருக்கும் ஆரா நன்றாக நடித்து இருக்கிறார் .  அழகாகவும் இருக்கிறார் . 
முதல் பாடலில் குழு நடனப் பெண்களின் நடன அசைவுகள்  சிறப்பாக இருக்கின்றன . டூயட் பாடலும் ஜஸ்ட்  ஓகே . 
paisa 4
இவற்றை தவிர படத்தில் குறிப்பிட்டுப் பாராட்டும்படி எதுவுமே இல்லை . 
குப்பை பொறுக்கிப் பிழைப்பது என்பது ஒன்றும் தப்பான தொழில் இல்லைதான் . அதற்காக குப்பை பொறுக்கும் வேலையை ஐ டி வேலைக்கு இணையாக பேசுவதும் ,
சாகும்வரை குப்பை பொறுக்குபவனாகத் தான் வாழ்வேன் என்பது அரைவேக்காட்டுத்தனம் .
படம் முழுக்க இப்படி செயற்கையான நாடகத்தனமான ஆர்வக் கோளாறான முட்டாள்தனமான யதார்த்தம் இல்லாத எரிச்சலூட்டும் இட்டுக்கட்டிய காட்சிகள் மண்டிக் கிடக்கின்றன . 
படத்தில் வரும் ரவுடி கேரக்டருடன் , எப்போதும் கஞ்சா  அடித்த மாதிரி ஒரு டிக்கெட் திரியுதே … அந்த ஐட்டம்  கேரக்டர் எல்லாம் (படத்துக்குள் ) என்னத்துக்கு என்றே தெரியவில்லை .
பைசா .. பைசா பெறாது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *