நான் திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு, ரத்னவேலு அவர்களிடம் உதவியாளராக சேர்ந்தேன். அப்போது எளிதில் படம் பண்ணிவிடலாம் என்று நினைத்தேன், ஆனால் எனக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை, பல போராட்டங்களுக்குப் பிறகே இந்த இடத்தில் நின்றிருக்கிறேன். இந்த இடத்தில் நிற்பதற்கான வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கோகுல், என் குருநாதர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த கலரிஸ்ட் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இன்று என்னுடைய ஒளிப்பதிவை குறிப்பிட்டு மக்கள் பாராட்டி வருகிறார்கள், அதற்கு காரணம் இவர்கள் தான், இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் பேசுகையில், “பேச்சி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி. பேச்சி படம் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படம் என்று விமர்சனமும், பாராட்டும் கிடைத்தது. இதற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இந்த படத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்த வெரூஸ் புரொடக்ஷன்ஸ் முஜிப் சார் மற்றும் சஞ்சய் சார் ஆகியோருக்கு நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கோகுல் மற்றும் இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி.” என்றார்.
நடிகர் நாட்டு ராஜதுரை பேசுகையில், “முதலில் அப்பா, அம்மாவுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி. பார்த்திபன், ராம் அண்ணா, கோகுல், விஜய் ஆகியோருக்கு நன்றி. நான் இதில் நடிக்கும் போது முக்கியமான கதாபாத்திரம் என்று தெரியாது, படம் முடிந்த பிறகு தான் அது தெரிந்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. தரமான படங்களை மக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கு இந்த படமும் சான்றாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் ஜெய்சங்கர் பேசுகையில், “பேச்சி படத்தை பொருத்தவரை ரியல் ஹீரோ பிரஸ்தான். படம் எடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும், பத்திரிகையாளர்களின் எழுத்துதான் மக்களை திரையரங்கிற்கு கொண்டு வந்தது, பத்திரிகையாளர்களுக்கு வெயிலோன் மற்றும் வெரூஸ் சார்பில் மிகப்பெரிய நன்றி. என்னுடைய அப்பா (மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்) அடிக்கடி சொல்வார், நம்ம என்னதான் நடித்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்கள்தான், அவர்கள் எழுதினால்தான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள், என்று. அவர் சொன்னது போல் இன்று பேச்சி படம் வெற்றி பெற்றதற்கு பத்திரிகைகள்தான் முதல் காரணம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விநியோக தலைமையாளர் குகன் பேசுகையில், “ஆடி அமாவாசை, பிரண்ட்ஷிப் டே இந்த தருணத்தில்தான் பேச்சி படம் வெளியானது. பேச்சி அவளோட இடத்தை எடுத்துட்டானு உறுதியாக சொல்லலாம். பிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து திறமையை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்குறாங்க. படம் முடிந்து வெளியீட்டுக்கு வரும் போது அங்கும் நண்பர்கள் சேர்ந்து படத்தை வெளியிடுகிறார்கள், அவர்கள்தான் வெரூஸ். கோகுல் பினாய் உள்ளிட்ட வெயிலோன் டீம் மற்றும் வெரூஸ் நிறுவனத்தின் முஜிப், சஞ்சய், ராஜராஜன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. தமிழ் சினிமாவின் உயிர் நாடியே சிறிய படங்களின் வெற்றி தான். பேச்சி போன்ற படங்கள் அதை நிரூபிக்கும் போது சினிமாவுக்கு உயிரோட்டமாக இருக்கும். ,
இயக்குநர் B.ராமச்சந்திரன் பேசுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி. பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காகதான் என்றாலும், என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சிதான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தேன்,
அறிமுக இயக்குநராக நான் எவ்வளவு பெரிய ஐடியாவை வைத்துக் கதை எழுதினாலும், அதை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய விசயம். பல படங்கள் தயாரித்து, சினிமா வியாபாரம் தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இந்த படம் நல்லா வரும், என்று முடிவு செய்து தயாரிக்கலாம். ஆனால், என்னுடன் நண்பனாக பழகிவிட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடன் தயாரிப்பாளராக பயணித்த கோகுல் பினாயின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும், அவருக்கு எனது இரண்டாவது நன்றி.
பல வருடங்களுக்கு முன்பு பேச்சி என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்தேன், அந்த படத்தை பார்த்துவிட்டு பாலுமகேந்திரா சார் என்னை பாராட்டியதோடு, அவருடன் என்னை சேர்த்துக் கொண்டு எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு நான் வந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், என்னுடன் எப்போதும் துணை நின்ற என் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜென்னி பேசுகையில், “பேச்சி என்ற சிறிய படத்தை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற மீடியாக்களுக்கு மிகப்பெரிய நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரன் சாருக்கும், கோகுல் பினாய்க்கும் நன்றி. எனக்கு இதுதான் முதல் ஸ்கீரின் பிரசன்ஸ். இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் தேவ் பேசுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு காரணம் கோகுல், ராமச்சந்திரன் சார், வெரூஸ் நிறுவனத்தார். ஆனால், இன்றைய நிகழ்ச்சி நடப்பதற்கு பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் மக்கள்தான் காரணம். வெற்றி விழா சந்திப்பு என்று சொன்னார்கள், ஆனால் இது வெற்றி விழா என்பதை விட நன்றி தெரிவிக்கும் விழா என்றால்தான் சரியாக இருக்கும், அதனால் உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். ராமச்சந்திரன் சார் சொன்னது போல், நிறைய சிறப்பு காட்சிகள் போட்டோம். ஆனால், அவர்கள் சொன்னதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் வரவில்லை.
பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சீனி பாட்டி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், எனக்கு 90 வயதாகிறது. நான் ஏற்காடு மலையில் சிரமப்பட்டு ஏறி நடித்தேன். என்னுடன் அனைவரும் கஷ்ட்டப்பட்டு நடித்தார்கள். இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நடிப்பேன். உங்களுடைய வாழ்த்துகள் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும், அனைவருக்கும் நன்றி.” என்றார்.
பாலசரவணன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த பானு பிரியா பேசுகையில், “பேச்சி படத்தில் என்னை நடிக்க வைத்த வெயிலோன் டீம் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன், நன்றி.” என்றார்.
வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜராஜன் பேசுகையில், “பத்திரிகையாளர்களுக்கு நன்றி, என் நண்பர்கள் சொன்னது போல் சிறிய கண்டெண்டாக இருந்தாலும் அதை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது பத்திரிகையாளர்கள்தான், அவர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. எங்களுடைய முதல் படம் இது, எங்களுடன் இணைந்து விநியோக பணிகளை சிறப்பாக செய்த ட்ரீம் வாரியர்ஸ் குகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எங்கள் பி.ஆர்.ஓ தர்மா சிறப்பாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொடுத்து வருகிறார், தொடர்ந்து இதை அவர் செய்ய வேண்டும், நன்றி.” என்றார்.
நடிகர் பாலசரவணன் பேசுகையில், “பேச்சி படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த போது நாங்கள் எதிர்பார்த்தது, படம் டீசண்டாக இருக்கிறது, என்று சொன்னால் போதும் என்பதுதான். ஆனால், இன்று நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது, இதற்கு காரணம் பத்திரிகைகள்தான். உங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், உங்கள் விமர்சனங்கள் மூலமாகவும் படத்தை மக்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேத்து உங்களுக்கும், உங்கள் விமர்சனங்கள் மூலம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த மக்களுக்கும் நன்றி.
அதேபோல் தனிப்பட்ட முறையில் நான் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், இந்த படத்தில் நான் நடித்த மாரி கதபாத்திரத்தை குறிப்பிட்டு அதில் எனது நடிப்பை அனைவரும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். இந்த படம் மட்டும் அல்ல, நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் என்னை குறிப்பிட்டு பாராட்டி எழுதி வருகிறார்கள், அதற்காகவும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு மாரி கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரனுக்கு நன்றி. கோகுல், விஜய் என அனைவரும் நண்பர்கள். இவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைத்தது பெரிய பாக்கியம். இவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைப்பதற்கு இயக்குநர் அருண்குமார்தான் காரணம், அவருக்கும் நன்றி. படம் பத்தாவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒத்துழைத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சி இன்று மிகப்பெரிய வெற்றி படமானதற்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமும் ஒரு காரணம், எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் குகன் ஆகியோருக்கும் நன்றி.” என்றார்.படத்தின் தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி பேச்சி படத்தின் வெற்றி விழாவாகவும், நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நடக்கிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையிடப்பட்ட பேச்சி சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆனால் மட்டும தான் வெற்றி கிடைக்கும் என்ற போதில் அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்த பிறகு, பின்னணி வேலைகள் தொடங்கிய போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி, அவரை நான் இப்போது தான் பார்க்கிறேன்.