அறிமுகக் கலைஞர்களின் பீச்சாங்கை

pee 3
கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர் எஸ்  கார்த்திக் மற்றும் பி ஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரிக்க,

புதுமுகங்கள்  கார்த்திக் , அஞ்சலி ராவ் மற்றும்  எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க,

அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும்  படம் ‘பீச்சாங்கை’ .

ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் (அறிமுகம்), இசையமைப்பாளர் பால முரளி பாலு (அறிமுகம்) மற்றும் படத்தொகுப்பாளர்  ஜோமின் மேதில்  (அறிமுகம்)

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .  இடது கைப் பழக்கம் உள்ள ஒரு பிக்பாக்கெட்காரனின் நிகழ்வுகளாக விரிந்தன அவை .

pee 2

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அசோக் ” தனது இடது கைப் பழக்கம் காரணமாக பிக்பாக்கெட் அடித்து சந்தோஷமாக வாழ்கிறான் ஒருவன் . ஒரு நிலையில்,

அவனது  இடது கை அவன் சொன்னதைக் கேட்கும் நிலையில் இல்லாமல் போக அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப படத்தின் கதை ” என்றார்

“அறிமுக கலைஞர்கள் திரையுலகில் வெற்றி காண்பது என்பது சற்று சவாலான காரியம்தான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்

தரமான படங்களுக்கும், திறமையான கலைஞர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு இருக்கின்றது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்து,

pee 1

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய  திரைப்படமாக எங்களின் பீச்சாங்கை படம் இருக்கும்” என்றார் பீச்சாங்கை படத்தின் கதாநாயகன் கார்த்திக். 

“இந்த 2017 ஆம் ஆண்டு இளம் திறமையான கலைஞர்களுக்கான ஆண்டு.  அறிமுக இயக்குநர்களால் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் வெளியான   பல படங்கள் ரசிகர்களின் உள்ளங்களை கவரந்தது மட்டுமின்றி,
சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்று இருக்கிறது.  நிச்சயமாக அந்த படங்களின் வரிசையில் இந்த பீச்சாங்கை படமும் இடம் பெறும்.  
கதாநாயகனாக அறிமுகமாகும்  கார்த்திக்குக்கும், இயக்குநராக அறிமுகமாகும் அஷோக்கிற்கும் இது  சிறந்த திரைப்படமாக இருக்கும்” என்றார் , படக் குழுவுக்கு பல உதவிகள் செய்த தயாரிப்பாளர்  தனஞ்செயன்

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *