நடிகர் தனுஷ் கதை திரைக்கதை வசனம் – சில பாடல்கள் எழுதி இயக்கி இருக்கும் படம் ப(வர்). பாண்டி. போகலாமா நாடி? பார்க்கலாம் .
ஐந்தாறு பிள்ளைகள் உள்ள வீட்டின் கடைக் குட்டியாக கிராமத்தில் பிறந்து சென்னை வந்து சினிமா ஸ்டன்ட் மாஸ்டராக ஆகி உழைத்து உயர்ந்து ஒரே மகனைப் பெற்று வளர்த்த நிலையில் ,
மனைவி போய்ச் சேர்ந்து பேரன் பேத்தி வந்து சேர, வீட்டில் சும்மா இருக்க முடியாமல் சமூக அக்கறையோடும் எப்போதும் நேர்மையோடும் நடந்து கொள்ளும் பவர் பாண்டிக்கும் (ராஜ்கிரன்)
மருமகள் பிரேமா (சாயாசிங் ) பெரும்பாலும் ராகவன் கட்சி . பேரன் துருவ் (மாஸ்டர் ராகவன்) பேத்தி சாஷா (பேபி சாவி ஷர்மா ) ஆகியோர் தாத்தா கட்சி .
ஒரு நிலையில் பிரச்னை பெரிதாகி வீட்டை விட்டே கிளம்புகிறார் பாண்டி .
எங்கே போவது என்று முதலில் புரியாவிட்டாலும் , ஒரு நிலையில் தனது முதற்காதலியான பூந்தென்றலைத் தேடிப் பயணிக்கிறார் . அந்தக் காதல் காட்சிகளாக விரிகிறது
கிராமத்து இளைஞன் பாண்டிக்கும் (தனுஷ் ) அவனது மாமா வீட்டுக்கு பள்ளி விடுமுறைக்கு(?) வரும் இளம் வயது பூந்தென்றலுக்கும் (மடோன்னா செபாஸ்டியன் ) காதல்,
அதன் பின்னர் பூந்தென்றலை சந்திக்க பாண்டி எடுத்த முயற்சிகள் வீணான நிலையில் , சென்னை வந்து ஸ்டன்ட், குடும்பம், மகன் பேரப்பிள்ளைகள் என்று ஆகி விட்ட பாண்டிக்கு ,
இப்போது முதற்காதல் மீண்டும் வலுப்பெறுகிறது .
முதிர்ந்த பூந்தென்றல் (ரேவதி) இப்போது ஹைதராபாத்தில் இருப்பதறிந்து தேடிப்போகும் பாண்டி (ராஜ்கிரண்) அவளைக் கண்டு பிடிக்கிறார் .
இதற்கிடையில் செய்த தவறுகளுக்கு வருந்தும் ராகவன்- பிரேமா இருவரும் பாண்டியைத் தேட ,
சபாஷ் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தனுஷ் .! அருமை . சிறப்பு சிறப்பு .
ஏற்கனவே மஞ்சப்பை என்ற படத்தில் இதே ராஜ்கிரண் ஏற்றது போன்ற ஒரு கேரக்டர் .
ஆனால் அந்த கேரக்டரின் பல்வேறு புதிய பரிமாணங்களை கண்டு பிடித்து, அந்த கதாபாத்திரத்துக்கு தனித் தன்மை கொடுத்து ,
எந்தெந்த விசயங்களுக்கு எல்லாம் தன்னை இப்போது மகன் கோபித்துக் கொள்கிறானோ அந்தந்த விசயங்களில் அந்தக் காலத்தில் தான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை,
பெரியவர் பாண்டி யோசித்துப் பார்க்கும் காட்சிகளை அளவோடு வைத்த விதத்தில் இயக்குனர் தனுஷின் தெளிவு தெரிகிறது .
இரண்டாம் பாதியை நோக்கிய பயணமாகவே படத்தின் முதற் பாதியை அமைத்த விதமும் கவனித்துப் பாராட்ட வைக்கிறது .
பிளாஷ் பேக் முடியும் போது பூந்தென்றலின் தம்பி பாண்டியை கட்டிக் கொள்ளும் இடம் காதலை மிஞ்சிய காதலின் உச்சம் . டைரக்டர் தனுஷ் மகுடம் சூடும் காட்சி இது .
ராஜ்கிரண் ரேவதி காட்சிகள் கொஞ்சம் அசந்தாலும் கோமாளிக் கூத்தாகப் போயிருக்கும். திரைக்கதையில் அந்தப் பகுதிகளில் கத்தி மேல் நடப்பது போல கவனம் தேவை .
ஆனால் தனுஷ் அந்த வகையிலும் சாதிக்கிறார் .
ஆணாதிக்க சமூகம் என்பதால் காதலியின் கணவன் கேரக்டரை மட்டும் முழுக்க மறைத்து விடுகிறார் . அதே நேரம் பாண்டி கதாபாத்திரத்தின் மனைவி கேரக்டரை ஓப்பனாக வெளியே சொல்கிறார்
வயது முதிர்ந்த பாண்டி — பூந்தென்றல் சம்ம்மந்தப்பட்ட காட்சிகளை அமைத்த விதத்தில் தெளிவு , திட்ட வட்டம் , தீர்மானம், காரண காரியம் , இவற்றுக்கு ஏற்ப,

நல்ல அழகாக ஷாட் எடுக்கத் தெரிந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கும் இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு பாடம் போல படிக்க வேண்டிய பகுதி இது . கிரேட் தனுஷ் .
எந்தப் பக்கத்தையும் முழுசாக சாயாத , ஆனால் கொஞ்சம் அதிகம் சாயும் பக்கத்தை ,பேரனின் கோபம் மூலம் முன் கூட்டியே உணர்த்திய காட்சி அமைப்பில்,
முக்கியக் கதாபாத்திரங்கள் பேசும் முத்தான வசனங்கள் இருக்கட்டும் … ‘காதலிச்ச பொண்ணோ கடவுள் கொடுத்த பொண்ணோ ரிசல்ட் என்னவோ ஒண்ணுதான் ” என்று,
பூந்தென்றலைக் காதலித்த பாண்டி, கல்யாணம் கட்டி பிள்ளை பெற்ற பாண்டி, மகனால் மறுதலிக்கப்படும் பாண்டி , முதல் காதலியின் முன்பு உற்சாகம் துள்ளும் பாண்டி ….
என்று இந்த நான்கு சூழல்களை அழகாக செட் செய்து கொடுப்பதிலேயே முடி சூடிக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் . அருமை
சிறப்பான பாடல்களை தந்ததோடு பின்னணி இசையை வாத்தியமாக அல்லாமல் ஒரு மொழியாகவே ஒலிக்க வைத்து உணர்வுகளுக்கு ஒளியேற்றுகிறார் இசை அமைப்பாளர் சான் ரோல்டன் .
பவர் பாண்டியாக படம் முழுக்க ஜொலிக்கிறார் ராஜ்கிரன் . அந்த மனிதன் வந்து நின்று சிரித்தாலே ஃபிரேம் நிறைகிறது . நியாய கோபம் , பாசம் , அறியாமை, காதல், வெள்ளந்தித் தனம் என்று பக்குவமான நடிப்பு.
இளவயது பாண்டியாக நடிப்பு சண்டை என்று எல்லா வகையிலும் கவர்கிறார் தனுஷ் . சொந்த டைரக்ஷன் என்பதால ஓவரா அலட்டிகிறாரு என்று ,
அப்பா பிரிந்து போன பிறகு அப்பாவுக்கு பிடித்த பாடலை காரில் கேட்டபடி அழும் காட்சியில் நடிப்புக்கும் மேலான ஓர் உணர்வை தருகிறார் பிரசன்னா.
மடோன்னா ஒகே . சாயாசிங்கின் அந்த வில்லித்தனம் போன்ற குளோசப் சிரிப்புகள் மட்டும் தனியே துருத்தித் தெரிகிறது .
குட்டீஸ் ஒகே .
சினிமா ஷூட்டிங்கில் ஸ்டன்ட் மாஸ்டராக பாண்டி அசத்திய பிறகு வரும் பாடலில் பாண்டி தொடர்ந்து நடக்கிறார் .
பிளாஷ் பேக்கில் அந்தக் கால பேருந்தை கொண்டு வந்தவர்கள் , அதற்கான சவுண்டு எஃபெக்டில் அந்தப் பேருந்துக்கான கடகட கடகட ஒலியை தராமல் நவீன பேருந்து எஞ்சின் ஒலியை சேர்த்தது ஏனோ ?
இவ்வளவு நல்ல படத்தில் இதெல்லாம் ஒரு குறையா என்று கேட்கலாம் .
யாரோ ஒரு புது இயக்குனர் இயக்கி இருந்தால் இதெல்லாம் பெரிய விசயமில்லைதான் . ஆனால் தனுஷ் போன்ற ஒரு சிறந்த நடிகர் இயக்குனராக அறிமுகம் ஆகும்போது இதை எல்லாம் சொல்ல வேண்டி உள்ளது .
சரி ,… ‘அது திட்டமிட்டு செய்யப்படவில்லை . உள்நோக்கம் இல்லை ‘என்று தனுஷே கூறி விட்டதால் , அது வேண்டாம் .
ஆக,
நல்ல கதை , சிறப்பான திரைக்கதை , கவரும் வசனங்கள் , அருமையான இயக்க உத்திகள் இவற்றோடு குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த,
மொத்தத்தில் ‘ப(வர்). பாண்டி .. உறவுக்கும் உணர்வுக்குமான உன்னத பாலம்
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————–
தனுஷ், ராஜ்கிரண், வேல்ராஜ், சான் ரோல்டன், ரேவதி, பிரசன்னா














