சண்டைப் பயிற்சி இயக்குனர் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ்(வீழான்) 

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார்.  அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும்  தயாரிப்பாளராக  முடிவு செய்துள்ளார்.

ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பீனிக்ஸ்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.  படத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், இயக்குனராக தனது முதல் திரைப்படம் சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

கதாநாயகன் தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது, “நாங்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக என்பதை உணர்ந்தேன்.இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது, சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்,

மேலும்இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

செய்தியாளர்களிடம் சூர்யா பேசும்பொழுது, நீண்ட நாட்களாக சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்புவதாகவும், அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார். மேலும் இந்த படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்ததாகவும், இந்த படத்தில் நடித்து தந்தையின் ஆதரவு இல்லாமல் தானே தனக்கான பெயரைத் தானே உருவாக்குவேன்  என்றும் கூறியுள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், தனது தந்தையின் நடை வேறு, அவரது நடை வேறு.

திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

நடிகர்கள்:
சூர்யா
விக்னேஷ்
வர்ஷா விஸ்வநாத்
அபி நக்ஷத்ரா
சத்யா NJ
சம்பத்
ஹரீஷ் உத்தமன்
திலீபன்
‘அட்டி’ ரிஷி
பூவையார்

தொழில்நுட்ப குழு:
எழுத்து மற்றும் இயக்கம் : ‘அனல்’ அரசு
தயாரிப்பு : ராஜலட்சுமி அரசகுமார்
இசை : சாம் CS
ஒளிப்பதிவு: R. வேல்ராஜ்
படத்தொகுப்பு : பிரவீன் KL
தயாரிப்பு வடிவமைப்பு: K.மதன்
சண்டைப் பயிற்சி: அனல் அரசு
ஆடை வடிவமைப்பு: சத்யா NJ
நிர்வாக தயாரிப்பு: MS முருகராஜ்
மக்கள் தொடர்பு: ரியாஸ்.K.அகமது

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *