2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
இணையவாசிகள், இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே.ஜே ஃபெரெட்ரிக். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், கலை இயக்கம் அமரன்.
ஒவ்வொரு மனிதரின் உள்ளங்கையிலும் திரைப்படத்தைக் கொண்டு சேர்க்கும் அமேசான் ப்ரைம் பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிடுவதைக் குறித்து படத்தின் இணைத் தயாரிப்பாளரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் CEO-வும் ஆன ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் கூறியதாவது..
” ‘பொன்மகள் வந்தாள்’ பட வெளியீட்டிற்காக ‘அமேசான் ப்ரைம் வீடியோ’வுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்”.
“ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்து படம் பற்றிய மேற்கொண்ட விவரங்கள் பற்றி அறிய மக்கள் எங்களிடம் கோரிக்கைகள் வைத்துக் கொண்டே இருந்தார்கள்.
அமேசான் ப்ரைம் வீடியோவில் பொன்மகள் வந்தாள் படம் உட்பட வெவ்வேறு மொழிகளில் ஏழு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புள்ள ஏழு இந்தியத் திரைப்படங்களை அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக உலகளாவிய அளவில் ப்ரீமியர் செய்யவுள்ளது.
” அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள ஷுஜித் சிர்காரின் (Shoojit Sircar ) “குலாபோ சிதாபோ” (Gulabo Sitabo ) வித்யாபாலன் நடித்துள்ள “சகுந்தலா தேவி” (Shakuntala Devi), ரா.மாதவன் ,அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம்,
சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி, ப்ரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேசான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரமற்ற இசை கேட்டல்,
மேலும் “கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு மொழிகளீல் திரையரங்கில் வெளியாகும் புதிய திரைப்படங்களை, வெளியான ஒரு சில வாரங்களிலேயே பார்க்க, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த, அவர்கள் விரும்பும் தளமாக ப்ரைம் இந்தியா மாறியுள்ளது.
“மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 7 படங்களின் வெளியீட்டை இந்தியப் பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மற்றும் வாடிக்கையாளர்களுக்காக இந்தத் திரைப்படங்களை முதன்மையாக அமேசான் ப்ரைம் வீடியோ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தபடி வசதியாகவும், மற்றும் தங்களுக்கு விருப்பமான திரையிலும் இவற்றைப் பார்த்து ரசிக்க முடியும். ப்ரைம் வீடியோ இந்தியாவில் அதன் ஆழமான ஊடுருவலுடன் 4000-க்கும் மேற்பட்ட டவுன் மற்றும் நகரங்களில் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலகளாவிய ரீதியில் சென்றடைவதன் வழியாக இந்தப்படங்களுக்கு ஒரு பெரிய உலகளாவிய வெளியீட்டுத் தளத்தை அளிக்கிறது. இந்த முன் முயற்சியைப் பற்றி நாங்கள் உண்மையிலேயே உற்சாகமாக உணர்கிறோம்.
அமேசான் பிரைமில் மேற்கொண்டு வர இருக்கும் படங்களின் விவரங்கள்;
Law (கன்னடம்) அமேசான் பிரைம் வீடியோவில் ஜுன் 26 முதல்:
ராகினி சந்திரன் (Ragini Chandran) சிரி பிரஹ்லாத் (Siri Prahlad) மற்றும் மூத்த நடிகர் முகமந்திரி சந்திரு (Mukhyamantri Chandru) ஆகியோர் நடித்துள்ள இந்த Law படத்தை ரகு சமர்த் (Raghu Samarth) எழுதி இயக்கியுள்ளார். அஸ்வினி மற்றும் புனித் ராஜ்குமார் மற்றும் குருதுத் தல்வார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
Sufiyum Sujathayum( மலையாளம்) வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது:
அதிதி ராவ் ஹைதரி மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் நடித்துள்ள “Sufiyum Sujathayum” நாரனிபுழா ஷானவாஸ் (Naranipuzha Shanavas) அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. மற்றும் இது விஜய்பாபுவின் ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸால் தயாரிக்கப்பட்டுள்ளது.
The Family Man, Mirzapur, Inside Edge, மற்றும் Made In Heaven போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் விருதுகள் வென்ற மற்றும் பரவலான பாராட்டுதல்களைப் பெற்ற உலகளாவிய அமேசான் பிரைம் வீடியோவில் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs.Maisel உட்பட ஆயிரக்கணக்கான சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் இணைந்துள்ள இப்புதிய வெளியீடுகள் அமேசான் ப்ரைம் வீடியோவில் அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி கிடைக்கப்பெறும்.
இச்சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறும் படைப்புகளும் அடங்கும்.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள் ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக் ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடோஃபோன், BSNL, போன்றவற்றின் ப்ரைம் வீடியோ ஆப்-ல் பிரைம் உறுப்பினர்களால் இந்த வெளியீடுகளை எந்த நேரத்திலும் மற்றும் எந்த இடத்திலும் பார்வையிட முடியும்.
அமேசான் பிரைம் வீடியோ குறித்து:
பல்வேறு விருதுகளை வென்ற, அமேசான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும் ப்ரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை ப்ரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய பார்க்கவும் PrimeVideo.com
ப்ரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: இந்த புதிய வெளியீடுகள் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven
உடனடி அணுகுவசதி: ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் ப்ரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் ப்ரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம்.
மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம்.
ப்ரைம் உடன் உட்பட்டுள்ளது: ப்ரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது மாதம் ரூ.129 கட்டணத்தில் கிடைக்கப் பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30 நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.
