ஒரு நேர்மையான வழக்கறிஞர் ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும் கதை திரைக்கதை அமைய,
ஜோதிகா, பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன். நடிப்பில் சூர்யா தயாரித்து இருக்கும் பொன் மகள் வந்தாள் படம் அமேசான் தளத்தில் வெளியாக முடிவான நிலையில்,
அதன் முன்னோட்டத்தை, அமேசான் பிரைம் வீடியோ 21 ஆம் தேதி வெளியிட்டது.
நாட்டின் செல்வாக்கு மிக்க வக்கீல்கள் மற்றும் சட்ட சமூகங்கள் டிரெய்லரை அதன் யதார்த்த சித்தரிப்பு மற்றும் கதையோட்டத்தை பாராட்டியுள்ளன.
படத்தில் ஒரு வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார், அதுவும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.
“https://youtu.be/vzfe8UEJFd0 Pls இதைப் பாருங்கள் …. திரைப்படம் நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டது. சரியான படம் ” என்கிறார் வழக்கறிஞர் சுஜாதா பதக்
அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக உலகளவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்பதால், இந்தப் படம் அமேசான் சந்தாதாரர்களுக்கு மே 29 முதல் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கிடைக்கும்.
சண்டிகர் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையும் ட்ரெய்லரைப் பாராட்டியதுடன், “பிரைம் வீடியோவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான பொன்மகள் வந்தாள் டிரெய்லரை வெளியிடுவதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” எம்று கூறியுள்ளது.
கடத்தல் மற்றும் கொலைக்கு தண்டனை பெற்ற தொடர் கொலையாளி ‘சைக்கோ ஜோதி’ சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை வழக்கறிஞர் வெண்பா எடுத்து , உண்மையை வெளிப்படுத்த சட்டத்தின் ஓட்டைகள் வழியே குற்றவாளி தப்பிக்க முயல, வெண்பா தனது மீது வீசப்பட்ட சவால்களை மீறி நீதிக்காக நிற்கிறார். என்பதே படத்தின் கதை .