ஆர் கே – வடிவேலு நடிக்க , இவனுக்கு தண்ணில கண்டம் இயக்குனரின் ” நானும் நீயும் நடுவுல பேயும்’

rk-1
பல சுவாரஸ்யமான தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய நிலையில் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற காமெடி கலாட்டா  படத்தின் மூலம் வெள்ளித் திரையில் வெற்றிக் கொடி நாட்டியவர் இயக்குனர் சக்திவேல் 
மக்கள் பாசறை  மூலம் நடிகர் – தயாரிப்பாளர் ஆர் கே தயாரித்துக் கதாநாயகனாக நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் வெளிவர இருக்கும் நிலையில் ,அடுத்து அதே மக்கள் பாசறை  மூலம் அதே நடிகர் – தயாரிப்பாளர் ஆர் கே தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க  வடிவேலு முழு நீள கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க,

சக்திவேல் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் நானும் நீயும் நடுவுல பேயும்

rk-3

எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில்   ஆர் கே -வடிவேலு ஆகியோரின் காம்பினேஷன் காட்சிகள்   இன்று வரை தொலைக்காட்சிகளில் மக்கள் ரசிக்கும் படி தொடர்ந்து ஒளிபரப்பப் படுகின்றன

இந்த கூட்டணிதான்  மீண்டும்  “நானும் நடுவுல பேயும் ” படத்துக்காக இணைகிறது. 
 
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது.    வடிவேலு முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி எடுக்கும் கேரக்டரில் படம்  முழுக்க வருகிறார்.
 
எல்லாம் அவன் செயல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
சென்னை, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் புத்தாண்டு தொடங்கி படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *