ஆஹா தமிழ் வழங்கும் ‘ரத்தசாட்சி’

ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக்  இஸ்மாயில்  இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்  “ரத்த சாட்சி”.  ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி  இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், OAK சுந்தர், பிரவீன், ஹரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர் 
 
‘ஆஹா தமிழ் ‘  ஓடிடி தளத்தில்  9 டிசம்பர் 2022 வெளியாகவுள்ள இப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
 
இந் நிகழ்வினில் இசையமைப்பாளர் ஜாவத் ரியாஸ் பேசியபோது, “இந்தப் படத்தில் ஒரு ஆன்மா இருக்கிறது. கதையிலும் இந்த ஆன்மா இருக்கிறது, அது  படத்திலும் வந்து இருக்கிறது , அதற்கு தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும்தான் காரணம்.  படத்தில் 6 பாடல்கள் இருக்கிறது. அது படத்துடன் ஒன்றிப் போய் இருக்கிறது. அதற்கு சிறப்பான வரிகளும் கிடைத்துள்ளது. “என்றார். 
 
எடிட்டர் பிரகாஷ் கருணாநிதி பேசியபோது, “.இந்த கதையில் ஒரு மனிதநேயம் பேசப்பட்டு இருக்கிறது. ஜெயமோகன் சார் போன்ற சிறந்த எழுத்தாளருடைய கதையை சிறப்பாக படமாக்கி இருக்கிறோம். அதற்கு பொருத்தமான நடிகர்கள் இந்த படத்திற்குள் வந்துள்ளனர். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் கதையை மேம்படுத்தி உள்ளனர். நடிகர் கண்ணா ரவிக்கு இந்த படம் திருப்பு முனையாக இருக்கும்.  “என்றார். 
 
நடிகர் ஹரிஷ் பேசியபோது, “இயக்குனர் ரஃபிக் அவர்கள் கதையை காட்சியாக கடத்தும் விதம் என்னை பிரமிக்க வைத்தது. “என்றார். 
 
நடிகர்  ஆறுபாலா பேசியபோது, “கதையின் சிந்தாந்தத்தை அதன் சாராம்சம் குறையாமல் இயக்குனர் படமாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தார்.  கண்ணா ரவி உடைய கடின உழைப்பு  பிரமிக்க வைத்தது.  இந்த படத்தை தொழில்நுட்ப கலைஞர்கள் அற்புதமாக மேம்படுத்தி உள்ளனர். “என்றார். . நடிகர் கண்ணா ரவி பேசியபோது, “இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயமோகன் சாரின் இந்தக் கதை அட்டகாசமானது. அதை இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படத்தை எடுக்க ஒப்புகொண்ட அல்லு அரவிந்த் சாருக்கு நன்றி. “என்றார். 
 
இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் பேசியபோது, “ஜெயமோகன் சார் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக் கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப் படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை  தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.  ஒளிப்பதிவாளரின்  பணி இந்த கதையை மேம்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் உடைய பங்கு கதையின் போக்குடன் ஒத்துப் போயுள்ளது.  “என்றார். 
 
தொழில் நுட்ப குழுவினர்
தயாரிப்பாளர்கள் – அனிதா மகேந்திரன் & டிஸ்னி (மகிழ் மன்றம்) ஆஹா தமிழ்
இயக்கம் மற்றும் திரைக்கதை – ரஃபீக் இஸ்மாயில்
எடிட்டர் – பிரகாஷ் கருணாநிதி
ஒளிப்பதிவு  – ஜெகதீஷ் ரவி
இசையமைப்பாளர் – ஜாவேத் ரியாஸ்
பாடலாசிரியர் – விஷ்ணு எடவன், கார்த்திக் நேதா
ஸ்டண்ட்- அசோக்
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *