நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான ஜி .வி.பிரகாஷ்குமாரின் மனைவியும் கர்நாடக இசைப் பாடகியும்
அந்நியன் படத்தில் ரண்டக்க, தொட்டிஜெயா படத்தில் அச்சு வெல்லக் கரும்பே , அழகிய தமிழ் மகன் படத்தில் கேளாமல் , வரலாறு படத்தில் இன்னிசை அளபெடையே ,
பையா படத்தில் அடடா மழைடா , சுறா படத்தில் தஞ்சாவூரு ஜில்லாக்காரி , மதராசபட்டினம் படத்தில் ஆருயிரே ஆருயிரே, 
மாப்பிள்ளை படத்தில் ரெடி ரெடியா மற்றும் ஒன்னு ரெண்டு , தெய்வத்திருமகள் படத்தில் விழிகளில் ஒரு வானவில், மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும் ,
சுந்தரபாண்டியன் படத்தில் நெஞ்சுக்குள்ளே , தலைவா படத்தில் யார் இந்த சாலை ஓரம் ராஜா ராணி படத்தில் நீ யாரோ யாரோ , தெகிடி படத்தில் விண்மீன் விதையில், 
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் என்னாச்சு என்னாச்சு , சேதுபதி படத்தில் ஹவா ஹவா , தெறி படத்தில் என் ஜீவன் போன்ற பாடல்களை பாடியவருமான ,
சைந்தவி ஜனவரி மூன்றாம்தேதி தனது பிறந்த நாளை , 
தன் கணவர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஐங்கரன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார்.
அருகில் இயக்குனர் ரவிஅரசு மற்றும் அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் ஆகியோர் .
