சண்டைக்காரி @ விமர்சனம்

பாஸ் புரடக்ஷன் கார்ப்பரேஷன் சார்பில் ஜெயபாலன் ஜெயக்குமார், ஷர்மிளா மான்ட்ரே, புன்னகை பூ கீதா ஆகியோர் தயாரிக்க, விமல், ஸ்ரேயா  சரண், சத்யா, பிரபு, கே ஆர் விஜயா, ரேகா, நடிப்பில் மாதேஷ் இயக்கி இருக்கும் படம். 

லண்டனில் ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்குப் போகும் தமிழ்நாட்டு இளைஞன் ஒருவன் (விமல்) அங்கு வாழும்  ஒரு கர்வம் பிடித்த பெண்ணுக்கு ( ஸ்ரேயா சரண் ) கீழே வேலை செய்கிறான். 

ஒரு நிலையில் குடியுரிமையை தக்க வைப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக அவளுக்கு ஒரு தற்காலிக கணவன் தேவைப்படுகிறான். ” என்னைக் கல்யாணம் செய்து கொண்டு சில மாதங்களில் விவாகரத்து செய்தால் உனது புரமோஷனுக்கு உதவுகிறேன்” என்று அவள் அவனிடம் கூற, அவனும் சம்மதிக்கிறான். 

அவனுடைய பெற்றோரை நம்ப வைக்க, அவன் அவளை அழைத்துக் கொண்டு தமிழகம் வருகிறான்   

தன்னிடம் உதவியாளனாக வேலை செய்யும் அவன்,  சொந்த ஊரில் எவ்வளவு பெரிய குடும்பத்துப் பிள்ளை;  அவனது அன்பான பாசம் மிக்க குடும்பம் எல்லாவற்றையும் பார்த்து அவள் மனம் நெகிழ .. அப்புறம் என்ன நடக்கும் என்பதைத்தான் உலகமே அறியும். 
தமிழ் சினிமா ஆயிரம் முறை மென்று துப்பி மீண்டும் அதை எடுத்து மென்று எல்லாம் துப்பிய கதை இது .

ஆனால் என்னமோ propsal என்ற ஆங்கிலப்படமாம் . அதை உருவி மை பாஸ் என்று ஒரு மலையாளப்படம் . அவர்களிடம் காசு கொடுத்து ரைட்ஸ் வாங்கி இந்தப் படத்தை எடுத்தார்களாம். 

எதுக்குன்னே புரியல. 

அரதப்பழசு கதை, காட்சி , காமெடி, நடிப்பு , படம் முழுக்க 1980களுக்கான  டெம்ப்லேட்   காட்சிகள் 

2019 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட படம் இது .இப்போதான் ரிலீஸ். அது மட்டுமல்ல. ஆட்சி மாறுவதற்கு முன்பு வழங்கப்பட்ட  மாநில அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த படம் (மூன்றாம் பரிசு), சிறந்த பின்னணிப் பாடகர் , சிறந்த கலை இயக்குனர் என்று மூன்று விருதுகள் வேறு கொடுத்து இருக்கிறார்கள். 

சரி, இவர்கள் ஒருவரையாவது விமர்சனத்தில் பாராட்டலாம் என்று எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கிராமத்து குளத்தில் டூ பீஸில்  குளித்து ஊரையே பார்க்க வைக்கும் நாயகி, மருமகளோடு சேர்ந்து தண்ணியடிக்க ஆசைப்படும் மாமனார் இவற்றுக்காக எல்லாம் விருது கொடுத்திருக்கலாம்.

நியூ யார்க், லண்டன்,  லொகேஷன்கள், கேரள பசுமை. பிரபு , கே ஆர் விஜயா போன்ற முகங்கள், இப்படி ரொம்ப ரொம்ப நோண்டி  தேடினால் பாராட்ட ஏதாவது கிடைக்கிறது. 

சண்டைக்காரி…. டோட்டல் சரண்டர் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *