பீப் (BEEP ) @ விமர்சனம்

M Quest மூவிஸ் தயாரிப்பில் ராகவ் ரங்கநாதன், யாமினி லக்ஷ்மணன், பிரேர்னா கண்ணா, பிரியதர்ஷினி, நிதீஷ் வீரா நடிப்பில் ஷண்முக சுந்தர் என்பவர் எழுதி இயக்கி முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி இருக்கும் படம்.

பீப் என்பது கெட்ட வார்த்தைகள் வரும் இடத்தில் அது கேட்காமல் செய்யப் பயன்படுத்தப்படும் ஒலியைக் குறிக்கும் சொல். 

பிரபல  நடிகை மீது வெறி கொண்டு அலையும் கல்லூரி மாணவன் (ராகவ்) ஒருவனுக்கு,  ஒரு புகைப்படத்தைக் காட்டினால் அதை வைத்து, படத்தில் பிடிக்கப்பட்ட நொடிக்கு முன்னும் பின்னும் நடந்த செயல்கள் , அதில் இருப்போரின் குணாதிசயம் எல்லாவற்றையும் சொல்லும் சக்தி உண்டு. 

அவனுக்கு ஒரு  விலைமாதுவின் (யாமினி) நட்பு கிடைக்கிறது. பிரபல நடிகையை அறிமுகப்படுத்துவதாக அவள் சொல்கிறாள், அவளை தனது கல்லூரியின்  நிகழ்சசிக்கு எல்லாம் தலைமை தாங்க அழைத்து வருகிறான்  கல்லூரியின் புரபஸரே (ஷண்முக சுந்தர்) அவளை பிக்கப் செய்கிறார் . 

அவரோடு அவள் போவதை அவன் பார்க்கிறான். புரஃபஸரின் மனைவிக்கு விஷயம் தெரிய  வருகிறது 

ஒரு நிலையில் புரஃபஸரும் சக நண்பன் ஒருவனும் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இருந்து அவள் கீழே  விழுந்து தலை சிதறி இறந்து கிடக்கிறாள். தற்கொலை என்கிறது போலீஸ். வாய்ப்பில்லை என்கிறான் இவன். 

நடந்தது என்ன என்பதே பீப்  

படத்தின் துவக்கத்தில் மேக்கிங்கில் ஒரு வித்தியாசம் தெரிந்தது.கால் கேர்ள் சம்மந்தப்பட்ட காட்சிகள் அவளுக்கு மாணவனுக்குமான நட்பு இவற்றை டீல் செய்த விதமும் நன்றாக இருந்தது .அதுவும் அவள் நடிகையை அறிமுகப்படுத்துவதாக சொல்வது, கல்லூரிப் போட்டிகளுக்கு நடுவராக எல்லாம் அவள் வருவது… இது போன்ற இடங்களில் எல்லாம்  ஒரு சைலன்ட் குறும்பும் தெரிந்தது. 

ஆனால் இரண்டாம் பகுதி மரணம் விசாரணை என்று போகும்போது (அதற்கு ஏற்றார் போல அவன் போட்டோவை  வைத்தே முழு ஜாதகமும் சொல்வான் என்ற விஷயம் எல்லாம் சொல்லி இருந்தாலும் கூட) , படம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. 

ஒரு புரபஸரை விட விலைமாது எவ்வளவு நல்லவள் ; இரக்கம் உள்ளவள் என்பது போல ஆங்காங்கே சில ‘ரீடிங் பிட்வீன் லைன்ஸ்’ நன்றாக  இருந்தாலும் கூட,  படம் முடியும்போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 

அந்த அளவு படம்  ஜஸ்ட் லைக் தட் ஓர் அலட்சியத்தோடே  எடுக்கப்பட்டுள்ளது .

எனவே பீப் …. மியூட். (MUTE )

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *