விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் விஷால் மற்றும் தவால் ஜெயந்திலால் காடா, அக்ஷய் ஜெயந்திலால் காடா ஆகியோர் தயாரிக்க,
விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் லிங்குசாமி இயக்கி இருக்கும் படம் சண்டக் கோழி 2. சிலிர்ப்பா ? சலிப்பா? பேசலாம்.
பதினைந்து வருடம் முன்பு வந்த சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சி …..
காதலித்த பெண் இறந்த விரக்தியில் அயல் நாட்டுக்கு போய் விடுகிறார் சின்ன அய்யா (விஷால்), ஊரில் அதே மரியாதையுடன் வாழ்ந்து வருகிறார் பெரிய அய்யா (ராஜ்கிரண்).விருந்தில் சாப்பாடு பரிமாறும்போது இலையில் கறி முன்ன பின்ன விழுந்த தகராறில் , அய்யாவின் ஊர் நபர் ஒருவருக்கும் பக்கத்து ஊர் நபருக்கும் சண்டை வருகிறது .
வெட்டுக் குத்தாகிறது. அய்யாவின் ஊர் தரப்பில் சிலர் சாக , பதிலுக்கு அய்யாவின் ஊர் ஆட்கள் பக்கத்து ஊர் நபர் ஒருவரை கொல்கின்றனர்.
அதில் கணவனை இழக்கும் ஒரு பெண் (வரலக்ஷ்மி ) தன் கணவனை வெட்டியவனின் குடும்பத்தையே , தன் ஆட்களை வைத்து வெட்டித் தள்ளுகிறாள் . ஒருவன் மட்டும் தப்பிக்கிறான் .
அவன் பெரிய அய்யாவிடம் உயிர் பிச்சை கேட்கிறான் . அந்த ஏரியாவிலேயே கலெக்டருக்கு படிப்பவன் அவன் ஒருவன்தான் . அவனை பாதுகாக்க உறுதி எடுக்கிறார் அய்யா .
அதோடு ஆறு ஆண்டுகளாக நடக்காமல் இருந்த வேட்டைக் கருப்பு கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்கிறார் .
திருவிழா சமயத்தில் கலெக்டருக்கு படிக்கும் அந்த ஒரு நபரையும் கொல்லமுடிவு செய்கிறது கோபக் காரப் பெண்ணின் தரப்பு .
இந்த நிலையில் அயல்நாட்டில் இருந்து சென்னை வருகிறார் சின்ன அய்யா .
அவரை அய்யாவின் டிரைவர் என்று எண்ணும் , அந்த ஊர் ஆசிரியரின் மகள் ( கீர்த்தி சுரேஷ் ) அவனோடு இயல்பாக பழகி காதலிக்கிறாள் . அவனும் அந்த காதலை ஏற்கிறான்.
மழை பெய்வதற்காக திருவிழாவை எப்படியும் நடத்தி விட வேண்டும் என்று பெரிய அய்யா முயல , அதை பற்றி கவலைப் படாமல் கொலை செய்வதிலேயே குறியாக இருக்கிறது அந்தத் தரப்பு .
அந்த முயற்சியில் கொலைகாரர்களே அதிர்ச்சியாகும் ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது .
காதலில் சிக்கல் வருகிறது.
கலெக்டருக்கு படிக்கும் நபரை காப்பாற்றுவதோடு திருவிழாவை நிறுத்தாமல் நடத்தும் பணியும் சின்ன அய்யா தலையில் விழுகிறது
அதே நேரம் கொபக்காரப் பெண்ணின் தரப்பு மேலும் கொலை வெறியோடு செயல்பட , அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
சண்டைக் கோழி முதல் பாகத்தில் இருந்தவர்களில் மீரா ஜாஸ்மின் தவிர மற்ற சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு , மேலும் நல்ல கதாபாத்திரங்களை சேர்த்து ,
முற்றிலும் திருவிழா பின்னணியில் பிரம்மாண்டமாக மண் மனத்தோடு, உறவு நட்பு மன்னிக்கும் குணம், மனித நேயம் , வாக்குத் தவறாமை இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து,
அழகியலோடு படத்தை கொடுத்துள்ளார் லிங்குசாமி .
தேவர் மகன் , பெரியண்ணா போன்ற படங்களை ஞாபகப் படுத்தும் கதைப்போக்கு எனினும் சிறப்பான திரைக்கதையில் படம் கவர்கிறது
தனது நிறம் உருவம் இமேஜுக்கு பொருத்தமான கதையில் ரசித்து நடித்துள்ளார் விஷால். சண்டைகாட்சிகளில் அசத்துகிறார். முதல் பாகம் வந்து இத்தனை வருடம் ஆகியும் இளமை குன்றாமல் இருப்பது அசத்தல்
ஆரம்பத்தில் கொஞ்சம் எரிச்சல் ஊட்டினாலும் போகப் போக பிக்கப் ஆகி ரசிக்க வைப்பதோடு, போராடி மீரா ஜாஸ்மின் ஏரியாவுக்குள் நுழைந்து விடுகிறார் கீர்த்தி சுரேஷ் .
அய்யா கேரக்டருக்கு இன்னும் அப்படியே பொருந்தி நிற்கிறார் ராஜ்கிரண். நடிப்பிலும் அப்படி ஒரு பக்குவம் .
வில்லியாக வரலக்ஷ்மி . முகத்தில் வரும் முரட்டுத்தனம் கை கொடுக்கிறது .
பல கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிக நடிகையர் .
பிரவீன் கே எல்; லின் படத் தொகுப்பு படத்துக்கு சுறுசுறுப்பு ஏற்றுகிறது .
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ”கம்பத்துப் பொண்ணு…. ” குதூகலிக்க வைக்கும் பாட்டு . பின்னணி இசையும் அருமை.
கே. ஏ .சக்திவேலின் ஒளிப்பதிவு துல்லியம், குளிர்ச்சி மற்றும் இயல்பு
அடுத்தடுத்து வரும் காட்சிகளை முன்பே ஊகிக்க முடிவதும் பார்த்து பழகிய காட்சிகள் வருவதும் குறை . எனினும் படமாக்கலில் சமாதானப்படுத்துகிறார் லிங்குசாமி
சண்டக்கோழி … மண் மனம் வீசும் கிராமத்துத் திருவிழா .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462