சதுர அடி 3500 @ விமர்சனம்

sadhura 4

ரைட் வியூ சினிமாஸ் சார்பில் ஜெய்ஸ்மன் பழயாட்டு தயாரிக்க , ஆர் பி எம் சினிமாஸ் சார்பில் ராகுல் வெளியிட, 

 நிகில் மோகன் , இனியா, ரகுமான்,சுவாதி தீக்ஷித், எம் எஸ் பாஸ்கர் , மனோபாலா, கோவை சரளா நடிப்பில் ஜெய்சன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் சதுர அடி 3500  . ரசனை பில்டிங் கட்டலாமா ? பார்க்கலாம் 

பல வீடுகள் அடங்கிய ஒரு  பெரிய அபார்ட்மென்ட் கட்டிக் கொண்டு இருக்கும் இஞ்சினீயர் அந்த கட்டுமாணத்துக்கு உள்ளேயே தூக்கில் தொங்குகிறார் . வழக்கை விசாரிக்க வருகிறார் ஒரு இன்ஸ்பெக்டர் . 
sadhura 5
இன்ஜினீயருக்கு வேண்டிய பெண்ணின் தகப்பன் , தாய் மற்றும் பலர் அந்த எஞ்சினீயரின் ஆவியை பார்க்கிறார்கள் . பார்த்து பயப்படுவோரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரும் அடக்கம் . 
ஆனால் வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஆவி நம்பிக்கை இல்லாதவர் . ஆனால் அவரது காதலி ஆவி நம்பிக்கை உள்ளவள் . 
ஒரு நிலையில்இன்ஸ்பெக்டர் கண்ணிலேயே ஆவி படுகிறது . அப்புறம் நடந்தது என்ன ? என்பதே இந்தப் படம் . 
ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்கிறார்கள் . 
sadhura 3
ரொம்ப ஆர்வமாக உற்சாகமாக கதை சொல்கிறார்கள் . 
 ரகுமான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் . இனியா கதாநாயகியாக நடித்துள்ளார் . தூக்கில் தொங்கும் என்ஜினீயர் , மற்றும் இன்ஸ்பெக்டராக வரும் புதுமுகங்கள் உற்சாகமாக நடிக்கிறார்கள்  
ஆனால் பழம் தின்னு கொட்டை போட்ட நடிகர்களான எம் எஸ் பாஸ்கரும் , கோவை சரளாவும் , மனோபாலாவும் காமெடி  என்ற பெயரில் சோதிக்கிறார்கள் . 
ஆவி நம்பிக்கை இல்லாத இன்ஸ்பெக்டர் முன்பு ஆவி தோன்றுவதும்  அப்போது சொல்லப்படும் திருப்பமும் பரவாயில்லை . 
sadhura 1
கடன் தொல்லை காரணமாக செத்துப் போனதாக அறிவித்துக் கொள்ளும் கேரக்டர் சம்மந்தப்பட்ட விஷயம் (இதுதான் உண்மை சம்பவமோ?) கனமான விசயம்தான் .
ஆனால் அதை இன்னும் அழுத்தமாக நெகிழ்வாகவோ அல்லது பரபரப்பாகவோ சொல்லி இருக்கலாம் 
திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இன்னும் நிறைய நேர்த்தி, கவனம் , சிரத்தை இருந்திருந்தால் நன்றாக விலை போயிருக்கும் இந்த சதுர அடி 3500 . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *