சிங்கப்பூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி’ துணையோடு,
‘காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ .
படத்துக்கு இசை ஜிப்ரன் . தவிர படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர் .
புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கும் இப்படத்தில் இடம் பெறும் ஆறு பாடல்களையும்
இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர் ஆறு நாடுகளில் வெளியிட முடிவு செய்து,
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருந்து கார் மூலம் பயணத்தைத் தொடங்கி,
பூடான், மியன்மார், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என ஆறு நாடுகளில் முப்பது நாட்கள் காரிலேயே பயணம் செய்து வெளியிட்டனர்.
பட வேலைகள் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி விட்ட நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு .
சிங்கப்பூரின் அழகைக் காட்டும் பட முன்னோட்டம் பரபரப்பாக இருந்தது .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அப்பாஸ் அக்பர், “நான் சிங்கப்பூர்வாசிதான் என்றாலும்
எனக்கு தமிழ்நாடுதான் பூர்வீகம். சிங்கப்பூரில் பல டாகுமெண்டரி, விளம்பர படங்கள் எடுத்த
அனுபவம் மட்டுமே கொண்ட எனக்கு சகல தரப்பினரும் ரசிக்கும்படியாக,
ஒரு தமிழ்ப் படம் எடுக்கும் ஆசை இருந்தது. இப்போது அப்படி ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டோம் என்பதில்
எனக்குப் பெருமையாக இருக்கிறது.
சென்னையைக் சார்ந்த ஒரு வளரும் இயக்குநர் சிங்கப்பூருக்கு வாய்ப்பு தேடி வருகிறான்.
அங்கே அவன் சென்னையைக் சேர்ந்த ஒரு பெண்னை சந்திக்க நேரிடுகிறது.
அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும், அதன் தொடர்ச்சியாக எற்படும் சம்பவங்களும்தான் இந்த ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் கதை.
படம் முழுக்க, முழுக்க கமர்ஷியல் கலந்த பொழுது போக்கு படமாக உருவாகியிருக்கிறது..” என்றார்
இசையமைப்பாளர் ஜிபரான் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை பற்றியெல்லாம் யாரும் பெரிதாக நினைக்க வேண்டாம்.
சும்மா பொழுது போகும் அளவுக்கு நிச்சயமாக இருக்கும்.
ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி ரீசண்டா இந்த படத்தைப் பார்த்த காலேஜ் ஸ்டூடன்ஸ்,
நாங்க எந்த இடத்துக்கு கை தட்டுவாங்க..? எப்ப வாய் விட்டு சிரிப்பாங்கன்னு கணக்கு போட்ட இடத்தில் எல்லாம் அப்படியே கைதட்டி சிரிச்சாங்க .
எங்க கணிப்பு தப்பவே இல்லை. மாணவர்கள் இந்தப் படத்தை அந்த அளவுக்கு ரசித்தார்கள்.
அதனால் படத்தை இந்த மாதமே வெளியிடப் போகிறோம்..” என்றார்.