பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்க பாலாஜி தரணிதரன் இயக்கி இருக்கும் படம் சீதக்காதி .
மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்வியல் பின்னணியில் அமைந்த இந்தப் படத்தில் மிக சிறப்பான நிறைய நாடகக் கலைஞர்கள் நடித்துள்ளனர் .
அவர்களின் மிக சிறப்பான நடிப்பு இந்தப்படத்தின் பிளஸ் என்கிறார்கள் .
அப்புறம் விஜய் சேதுபதி மட்டும் சும்மா இருப்பாரா ?
படத்தில் ஒன்பது நிமிடம் வரும் ஒரு காட்சி . அதை ஒரே ஷாட்டில் ஒன்பாது நிமிடமும் நடித்து அசத்தி இருக்கிறாராம் விஜய் சேதுபதி .
அந்தக் காட்சி விஜய் சேதுபதியின் இதுவரையிலானா நடிப்புப் பாதையில் மறக்க முடியாத மைல் கல் என்கிறார்கள் .
வரும் 20 ஆம் தேதி வியாழக் கிழமை திரைக்கு வருகிறது சீதக்காதி .