டி. ராஜேந்தரின் இசை மற்றும் பாடல்களில் ‘நான் கடைசி வரை தமிழன்’

சி ஆர் டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.  ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ” நான் கடைசி வரை தமிழன்” இப்படத்துக்கு சகலகலா வல்லவன்  டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார்.
 
இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள்  விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 
 
நான் கடைசி வரை தமிழன் படத்தின் தொடக்க விழா   பூஜையுடன் நடந்தது. பின்னர்    படப் பெயர் அறிவிப்பு விழா நடந்தது. இதில் பிரபல  இயக்குனரும், இப்படத்தின் இசை அமைப்பாளருமான  டி.ராஜேந்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
 
விழாவில் தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன் , நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், நடிகர் தயாரிப்பாளர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
 
முன்னதாக படத் தயாரிப்பா ளரும்.இயக்குநருமான எம்.ஏ.ராஜேந்திரன்  பேசியபோது, “நான் கடைசிவரை  தமிழன் பட தொடக்க விழாவிற்கு வந்து கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர். அனைவரும் நமது சகோதர சகோதரிகளே. நாம் இந்துவாக முஸ்லீமாக கிறிஸ்தவராக இருக்கலாம் ஆனால் முதலில் நாம் மனிதனாக இருப்போம். தமிழன் என்றாலே அது வரலாறு, என் தமிழுக்கு பல பெயர்கள் உண்டு அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ்..  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
 
இவ்விழாவுக்கு வந்திருக்கும் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர், சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர்  அன்புச்செல்வன்,  இமான் அண்ணாச்சி,நிர்மல்,  ராஜா, ஜெய்பாபு, நடராஜன்  உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன். 
 
கடைசி வரை தமிழன் படத்தின் கதை மிகவும் மாறுபட்ட வித்ததில் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை ஒரு விஞ்ஞானி,.மகன் ஒரு ராணுவ வீரன். இருவருமே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள். எதற்காக,ஏன்  என்பதுதான் கதை.
 
தமிழன் என்றால் சரித்திரம் படைப்பவன்.ஆங்கிலத்தில் அவதார் 2ம் பாகம் படம் 160 மொழிகளில் திரையிடப்பட்டது. .  அதை மிஞ்சும் வகையில் 163 மொழிகளில்  நான் கடைசி வரை தமிழன் படம் திரையிடப்படும் .  அவதாா் படம் சாத்தியம் என்றால்  நான் கடைசிவரை தமிழன் படமும்  சாத்தியம்தான்…”என்றார். 
 
நடிகர் கராத்தே ராஜா பேசியபோது , “இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. சிறுபிள்ளையாக இருந்தபோது டி.ராஜேந்தர் பாடல்கள் என்றால் தாளம்போட்டு பாடிக்கொண்டே இருப் பேன்.அவரது பாடல்கள் எனக்கு பிடிக்கும் . நான் கடைசி வரை தமிழன் என்று படத்தின் பெயரை கேட்டாலே மனதில் பதியும் அளவுக்கு அருமையான டைட்டிலை வைத்திருக்கும் இயக்குனர் எம்.ஏ.ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.  இப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.”என்றார். 
 
நடிகர் இமான் அண்ணாச்சி பேசியபோது, ” இந்நிகழ்ச்சியின் மிகச் சிறப்பு என்னவென்றால் தமிழ் திரையுலகையே ஆட்டிப்படைத்த ஒரு ஜாம்பவான்  டி.ஆர் இங்கு வந்திருப்பதுதான் .
 
கொஞ்ச நாளாவே  சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கொடுக்கலாம் என்ற பேச்சு நடக்கிறது. என்னைக் கேட்டால் அந்த பட்டத்தை டி.ராஜேந்தருக்கு தரலாம்”என்றார். இப்படிச் சொன்னவுடன் டி.ராஜேந்தர் எழுந்து அதெல்லாம் வேண்டாம் என்றார்
 
ஆர்.கே.அன்புசெல்வன் பேசியபோது, “நான் கடைசி வரை தமிழன் என்ற டைட்டிலை கேட்கும்போதே வீரம் வெறி பிறக்கிறது.  பட டைட்டிலை கேட்டவுடனே ராஜேந்தர்  இசை அமைக்க ஒப்புக்கொண்டார் . இதற்கு முன்பு கடைசியாக பண்ணாரி அம்மன் என்ற படத்திற்கு இசை அமைத்தவர் 30 வருடத்துக்கு பிறகு மீண்டும் வெளிப்படத்துக்கு அவர் இசை அமைப்பது மிகுந்த மகிழ்ச்சி.”என்றார். 
இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் பேசியபோது, ” இந்தப் படத்துக்கு நான் கடைசி வரை தமிழன் என்று பெயர் வைத்திருப்பதாக இயக்குநர் எம் ஏ.ராஜேந்திரன் கூறினார். ராஜேந்திரன் என்று சொன்னாலே திறன் அந்த திறன் இந்த ராஜேந்திரன் இடத்தில் இருக்கிறது. பண்ணாரி அம்மன் படத்துக்கு பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன். இந்த பட டைட்டிலில் உள்ள தமிழன் என்ற ஒரு வார்த்தைதான் இப்படத்துக்கு நான் இசை அமைக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம்.
 
முருகன் என்றால் தமிழ் ,  நான் கடை.சி வரை தமிழன் படத்தில் தமிழ் இருக்கிறது. இயக்குனர் ராஜேந்திரனிடம்  எனக்கு பிடித்தது பிடிவாதம் நானும் பிடிவாதக்காரன். இயக்குனர் இராஜேந்திரனிடம் ஏன் கடைசி வரை தமிழன்னு சொல்றிங்க,  உயிர் உள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, உணர்வுள்ளவரை  தமிழன்னு, சொல்லுங்க,  மூச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க , பேச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க  என்றேன். இல்லை சார். கடைசி வரை தமிழன்தான் எனக்கு பிடித்திருக்கிறது  என்றார்.  அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது மலைப்பு  தமிழன் என்றால் இனிப்பு.”என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *